சூரத் முதல் சேலம் வரை ஜிஎஸ்டி-க்கு எதிராக ஜவுளி வணிகர்கள் போராட்டம்..!

சூரத்: விசைத்தறி மூலம் ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் மிகப் பெரிய சந்தை சூரத், தென்னகம் என்றால் சேலம், ஈரோடு ஆகிய நகரங்கள். கைத்தறி உதவியுடன் தயாரிக்கப்படும் ஃபேப்ரிக் வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டிக்கு எதிராகப் போர் கொடி எடுத்துள்ளனர்.

ஜவுளி துறையைப் பொருத்த வரை தோராயமாக 70,000 வர்த்தகர்கள் குட்லக் ஜவுளி சந்தையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜிஎஸ்டிக்கும் பதிவு செய்ய மருப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்புடைய கைத்தறி மூலம் செய்யும் ஃபேப்ரிக் சந்தை ஜிஎஸ்டி வரிக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றைச் சென்ற ஒரு வார கலாமாக நடத்தி வருகின்றனர்.

வரி இல்லை

வரி இல்லை

இப்போது வரை எந்த வரியும் இல்லை, நாங்கள் வாட் பொன்ற எந்த வரி முறைக்கும் பதிவு செய்யவில்லை, இங்குக் கணினி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தெரியாதவர்கள் பலர் முதலாளிகளாக உள்ளனர். எங்களை அரசு ஏன் இப்படி ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறக் கட்டாயப்படுத்துகின்றது என்று தெரியவில்லை என்கின்றனர் வணிகர்கள்.

1 சதவீதம் வரி வித்தாலும் பாதிப்பு தான்

1 சதவீதம் வரி வித்தாலும் பாதிப்பு தான்

தனது அலுவலகத்தின் வெளியில் உண்ணாவிரதம் நடத்தி வரும் ஹிதேஷ் இது குறித்துக் கூறுகையில் 5 சதவீதம் என்ன 1 சதவீதம் வரி வித்தாலும் சிறு வணிகர்களை ஜிஎஸ்டி பெறும் அளவில் வணிகர்களைப் பாதிக்கும் என்று கூறினார்.

கணினியை இயக்கத் தெரியாது

கணினியை இயக்கத் தெரியாது

ஜிஎஸ்டி வரி வணிகர்களின் லாபத்தைப் பாதிக்கும். எனக்குக் கணினியை இயக்கத் தெரியாது. அதற்காக நான் கணினி ஆப்ரேட்டர் மற்றும் கணக்காலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் இதற்காகத் தான் ஆண்டுக்கு 3 லட்சம் வரையில் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ரஜிஷ் என்ற வர்த்தகர் தெரிவித்தார்.

பெரிய மற்றும் சிறு ஜவுளி சந்தைகள்

பெரிய மற்றும் சிறு ஜவுளி சந்தைகள்

சுரத்தில் மொத்தமாக 170 பெரிய மற்றும் சிறு ஜவுளி சந்தைகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 75,000 கடைகள் உள்ளன, தினமும் 115 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகின்றது. இங்கு உள்ளவர்கள் பாலிஸ்டர் புடவைகள், துனி மெடிரியல்கள், வீட்டிற்குத் தேவையான பேப்ரிக் ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்று வருகின்றனர்.

நூல்

நூல்

ஜிஎஸ்டி வரியை நூல் விற்பனையுடன் அரசு நிறுத்துக்கொள்ள வேண்டும் என்று இங்கு உள்ள வணிகர்கள் விரும்புகின்றனர். பல வணிகர்கள் படிக்காதவர்கள் மற்றும் கணினி அறிவு இல்லாதவர்கள். ஜிஎஸ்டிக்கு இந்த அறிவு தேவை, அதுமட்டும் இல்லாமல் நட்டம் அடைந்தால் அதிக வேலை வாய்ப்பு இழப்புகள் நடைபெறும் என்றும் வணிகர்கள் கூறுகின்றனர்.

சூரத்

சூரத்

சூரத்தில் மட்டும் 7.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குவதாகவும் அவற்றில் பல 18 சதவீத வரிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகவும், 12 சதவீதமாக வரியைக் குறைக்க வேண்டும் என்றும், உள்ளீட்டு வரி கடன் நன்மைகள் அளிக்க வேண்டும் என்று நசவாளர் பணிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

சீன பேப்ரிக்

சீன பேப்ரிக்

மேலும் சீன ஃபேப்ரிக் ஆடைகளை இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனற் கோரிக்கை வைத்துள்ளனர். 70 சதவீத விசைத் தரிகள் ஆர்டர்களைப் பொறுத்தே வேலை அளிக்கின்றனர். முக்கிய நெசவாளர்கள் மூலப்பொருள்களை ஜூலை 1 முதல் வங்க போவதில்லை, விற்கவும் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

கேள்விக்குறி

கேள்விக்குறி

நெசவு தொழிலை நம்பி உள்ள 14.5 லட்சம் ஊழியர்களின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் ஜிஎஸ்டி வரியால் நட்டம் ஏற்பட்டு அதிக நபர்கள் வேலை வாய்ப்பினை இழக்க நேரிடும் என்றும் ஆஷிஸ் குஜராத்தி என்ற நெசவாளர் கூட்டுறவு அமைப்பின் தலைவர் கூறினார்.

தமிழகம்

தமிழகம்

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஜவுளிக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால் வரியை நீக்க வலியுறுத்தி விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தியானது நடந்து வருகிறது. சுமார் ரூ.150 கோடி அளவில் நாள்தோறும் ஜவுளி உற்பத்தி நடைபெறுவதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரி ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் ஜவுளிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம்

விசைத்தறி உரிமையாளர்கள் 5% வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் 3 நாள்களுக்கு, அதாவது 29-ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் விசைத் தறியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 கோடி பேர்

1 கோடி பேர்

இதுகுறித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் 25 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில் உள்ள நெசவு, டையிங், வாஷிங், பிரிண்டிங் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் 1 கோடி பேர் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரி விதிப்பு அமலாகும்போது நிச்சயமாக ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும்.

அதிக விலை

அதிக விலை

சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இதுவரை ஜவுளி பொருட்களைக் குறைந்த விலையில் தான் விற்பனை செய்து வருகின்றன. நம் நாட்டில் தயாரிக்கப்படும் ஜவுளியை அதிக விலைக்குக் கொடுக்கும் போது வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே ஜவுளி உற்பத்திக்கு 5% வரி விதிப்பை ரத்துச் செய்ய வேண்டும் என்கின்றனர். நாடா இயங்காது எனில் நாடே இயங்காது என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு பேட்ச்

கருப்பு பேட்ச்

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருகிற 30-ஆம் தேதி முதல் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் என அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+