இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குரூப், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஆன்லைன் பலசரக்கு ஆதாவது மளிகை பொருட்கள் வர்த்தகத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஈகாமர்ஸ் சந்தையில் பேஷன், எலக்ட்ரானிக் என அனைத்துப் பிரிவு சார்ந்த வர்த்தகத்திலும் வெற்றிபெற்றாலும் பலசரக்குப் பிரிவில் எவ்விதமான வளர்ச்சியையும் எட்ட முடியவில்லை.
இந்நிலையில் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க தற்போது டாடா குரூப் களத்தில் குதித்துள்ளது.
கிராசர்மேக்ஸ்
அன்லைன் பலசரக்கு விற்பனையில் வெற்றி பெற வேண்டுமெனப் பல மாதங்களாக அமேசான் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், டாடா குழுமம் குருகிராம் நகரத்தை சேர்ந்த கிராசர்மேக்ஸ் என்ற அன்லைன் பலசரக்கு விற்பனை நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
வர்த்தக முடக்கம்..
டாடாவின் ரீடைல் வர்த்தகம் மேற்கு இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் கிராசர்மேக்ஸ் நிறுவனத்தின் குருகிராம் வர்த்தகத்தை முழுமையாக முடக்க உள்ளது.
ஆன்லைன் சந்தை
இந்தியாவில் பலசரக்குப் பொருட்களில் மட்டுமே ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மிகவும் குறைவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்தப் பிரிவிலும் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியா சந்திக்கும்.
பிளிப்கார்ட், அமேசான்
ஆன்லைன் பலசரக்கு விற்பனையில் பிளிப்கார்ட், அமேசான் மட்டுமே அடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாடா குதித்துள்ளது.
இதனால் பிக்பேஸ்கட் நிறுவனம் தைரியமாகத் தனது வர்த்தகத்தை யாரிடமும் விற்காமல் தொடர்ந்து இப்பிரிவில் ஆதிக்கம் செலுத்தலாம்.
டிரென்ட் ஹைப்பர்மார்கெட்
இந்தக் கைப்பற்றுதல் மூலம் டாடா குழுமம் கிராசர்மேக்ஸ் (GrocerMax) நிறுவனத்தின் நிர்வாகக் குழு மற்றும் தொழில்நுட்பம், கட்டுமானம் என அனைத்தையும் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்தக் கிராசர்மேக்ஸ் தளம் டாடா-வின் Trent Hypermarket வர்த்தகப் பிரிவை வலிமைப்படுத்தும் எனத் தெரிகிறது.
பிரிட்டன் நிறுவனம்
டிரென்ட் ஹைப்பர்மார்கெட் என்பது டாடா குழுமம் மற்றும் பிரிட்டன் நாட்டின் டெஸ்கோ இணைந்த நடத்தும் சில்லறை விற்பனை நிறுவனம். இந்நிறுவனம் ஸ்டார் பஜார், ஹைப்பர்மார்கெட் சங்கிலி மற்றும் லேண்டுமார்ட் ஆகிய பிராண்டுகளை வைத்துள்ளது.
ஸ்ராட் பிராண்டு கீழ் இந்நிறுவனம் Dailies, Market, மற்றும் Hyper ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்தியாவில் வர்த்ததம் செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications