ஜிஎஸ்டி வந்ததற்கு இவர்கள் தான் காரணம்..!

இன்னும் சில மணிநேரங்களில் நாட்டின் மறைமுக வரி விதிப்புகள் முழுமையாக மாற்றி, ஒரு நாடு ஓரே வரி என மொத்த வர்த்தகச் சந்தையும் சலவைக்குப் போட்டது போல் ஆகிவிடும். இன்று நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் சேவை வரி என அழைக்கப்படும் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் நிறைவு பெற்று மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆனால் ஜிஎஸ்டி அறிமுகம் வணிகர்களுக்கும், உற்பத்தியாளர்களும், ஏன் சாமானியர்கள் கூட விருப்பமில்லை. மேலும் மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்ததில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது எனக் கருத்துச் சந்தையில் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வருவதற்கு முக்கியக் காரணம் யாரென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்துபோவீர்கள்.

வேலைவாய்ப்பு முதல் ஜிடிபி வரை..

வேலைவாய்ப்பு முதல் ஜிடிபி வரை..

வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவில் தான் அதிகளவிலான வகைப்படுத்தாத (Unorganised) துறைகளும், வர்த்தகமும் உள்ளது.

சொல்லப்போனால் இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தான் நாட்டின் 92 சதவீத வேலைவாய்ப்புக்குக் காரணமானவர்கள், மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 - 70 சதவீதம் இவர்களின் கையில் இருப்பது மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயம்.

அதுக்கு என்ன இப்போ..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விளக்கத்திற்கு வருகிறேன்.

 

விளைவு...

விளைவு...

பொதுவாக வகைப்படுத்தாத (Unorganised) துறை மற்றும் நிறுவனங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்காது. இதனால் இவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு முழுமையான வரி வசூல் செய்யப்படுவதில்லை.

ஒற்றை இலக்கு

ஒற்றை இலக்கு

மேலும் இவர்கள் பல மறைமுகமான வழிகளில் வர்த்தகம் செய்து கருப்புப் பணத்தை உருவாக்கவும், நாட்டின் வளர்ச்சியில் கணக்கு காட்ட முடியாத வர்த்தகத்தையும் இவர்கள் வைத்துள்ளனர்.

இவர்களை மொத்தமாக வரி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒன்றை இலக்குடன் தான் இந்த ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது.

 

உலக வங்கி

உலக வங்கி

இந்திய வர்த்தகச் சந்தை குறித்து உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வகைப்படுத்தப்படாத நிறுவனங்களாகவும், துறைகளாகவும் உள்ளது. இதன் மூலம் பல முறையற்ற பணிகளும் வர்த்தகமும் செய்யப்பட்டு வருகிறது.

தவறான பாதை

தவறான பாதை

இது இந்தியாவின் வளர்ச்சியைக் குறைப்பது மட்டும் அல்லாமல், ஊழல், வரி ஏய்ப்பு எனப் பல தவறான பாதைக்கு நாட்டை வழிவகுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 90 லட்சம்.

 

மாற்றம்

மாற்றம்

ஜிஎஸ்டி அறிமுகத்தின் மூலம் நாட்டின் 90 சதவீத வகைப்படுத்தாத (Unorganised) துறைகளும், வர்த்தகமும், வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய இந்திய வர்த்தகச் சந்தைக்கும் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி..

சரக்கு மற்றும் சேவை வரி..

ஜிஎஸ்டி அறிமுகத்தின் மூலம் தற்போது நடைமுறையில் இருக்கும் 17 வரிகள், 23 செஸ் வரிகள் ஆகியவை முழுமையாக நீக்கப்பட்டு ஒற்றை வரியாக வர உள்ளது.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இந்தியாவில் வகைப்படுத்தாத துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்துச் சிறிய புள்ளிவிவரம் உங்களுக்காக.

கட்டுமான பொருட்கள் துறை: 50-70 சதவீதம் நிறுவனங்கள் வகைப்படுத்தவை
பிளாஸ்டிக் மற்றும் பேகேஜ்: 40-45 சதவீதம்
எலக்ட்ரிக் பொருட்கள்: 25-40 சதவீதம்
டைய்ரி துறை: 78 சதவீதம்
ஆடை: 70 சதவீதம்
நகை: 75 சதவீதம்
மருத்துவச் சிகிச்சை: 85 சதவீதம்

 

இரண்டு விஷயம்

இரண்டு விஷயம்

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் 2 விஷயங்கள் நடைபெறும்.

1. வகைப்படுத்தாத நிறுவனங்களாக இருக்கும் அனைத்தும் வரி அமைப்பிற்குள் வரும்.
2. இல்லையெனில் தற்போது செய்யும் அளவை விடவும் மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே செய்யும், கடைசியில் வர்த்தகச் சந்தையை விட்டே வெளியேறும்.

 

உதாரணம்

உதாரணம்

வகைப்படுத்தாத நிறுவனங்களுக்கு மிகசரியான உதாரணம் பாஸ்ட் புட் உணவகங்கள் அல்லது சாலை ஓரங்களில் இருக்கும் குட்டுக்கடைகள்.

இவர்களின் கடை என்னவோ சிறியதாக இருந்தாலும், விற்பனையின் அளவு மிகவும் அதிகம் என்பதை அதை யாராலும் மறுக்க முடியாது. சென்னை, மும்மை, டெல்லி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் சிறு உணவகங்கள், பாஸ்ட் புட் சென்டர்கள் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 5000 முதல் 10,000 ரூபாய் வரை வருமானத்தைப் பெறுகின்றனர்.

இவர்கள் செலுத்தும் வரி எவ்வளவு என்று பார்த்தால் எதுவுமே இல்லை. இதுபோல் ஒவ்வொரு துறையில் பல வகையில் வகைப்படுத்தாத நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகிறது.

 

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலேயே இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, பதவி செய்யப்படாத, அடையாளம் காணப்படாத, கணக்கு காட்டப்படாத நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது.

இவர்களை மையமாக வைத்தே இந்த ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது.

 

சரியா..? தவறா..?

சரியா..? தவறா..?

இதை சரியா..? தவறா..? என்பதை ஆய்வு செய்வதை காட்டிலும் வருமானத்திற்கு ஏற்ற வரி செலுத்த வேண்டும் என்பது தற்போது அனைத்து நிறுவனங்கள் மத்திலும் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் தனிநபர் மட்டும் கட்டாயமாக வரியை செலுத்த வேண்டிய நிலை இருக்காது.

வாசகர் கருத்து..

வாசகர் கருத்து..

Naga: அது சரி... இது போன்ற வகை படுத்தப்படாத தொழிகளில் இருந்து எப்படி GST மூலமாக வரி வசூலிக்க முடியும் என்று சொல்லவேயில்லையே...

பதில்: ஜிஎஸ்டி வரியமைப்பின் கீழ், ஒரு நிறுவனம் தயாரிப்புக்கான பொருட்களுக்கான உட்பொருள் (Input) யாரிடம் வாங்கியது என்ன வாங்கியது, எவ்வளவு வாங்கியது, அதன் மதிப்பு என்ன ஆகியவற்றுடன் உட்பொருட்களை அளித்த நிறுவனத்தின் பான் எண், டான் எண் என அனைத்தையும் ஒவ்வொரு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் நீங்கள் யாரிடம் விற்பனை செய்கிறீர்கள் என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் இரண்டு பக்கமும் வருவாய் கணக்கீட்டை எளிமையாக செய்து வரி வசூல் செய்ய முடியும்.

 

ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டி எதிரொலி

கடிவாளம்

கடிவாளம்

கார், பைக் விலை பட்டியல்

கார், பைக் விலை பட்டியல்

இம்சை

இம்சை

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+