ஆப்பிள் நிறுவனம் ஜிஎஸ்டி வரிக் கொள்கை இந்தியாவில் அறிமுகம் ஆனதை அடுத்து 4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை தனது நிறுவனத்தின் அனைத்து ஐபோன் மாடல்களின் விலையினையும் குறைத்துள்ளது.
அன்மையில் தான் ஐபோன் நிறுவனம் பெங்களூரில் உள்ள பீனியா தொழிற்சாலையில் இருந்து இந்தியாவில் தயாரிப்பினை துவங்கியுள்ளது. இப்போது விலை குறைப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபோன் 7
விலை குறைக்கப்பட்ட காரணத்தினால் 256 ஜிபி ஐபோன் 7-ன் விலை 92,000 ரூபாயில் இருந்து 85,400 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஐபோன் 6
32 ஜிபி ஐபோன் 6-ன் விலை 6.2 சதவீதம் குறைந்து 46,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஐபோன் எஸ்ஈ
பெங்களூரில் தயாரிக்கப்படும் ஐபோன் எஸ்ஈ 32 ஜிபி-ன் விலை 27,200 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே 128 ஜிபி போனின் விலை 6 சதவீதம் குறைந்து 35,000 ரூபாயாக உள்ளது.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தினைப் பொருத்த வரை இந்திய சந்தை முக்கியமானதாகும். ஏற்கனவே சீனாவில் சந்தையை இழந்துள்ளதால் இந்தியாவில் உஷாராக இருக்க முடிவு செய்துள்ளது. அதனால் தான் இந்த ஜிஎஸ்டி உடனான உடனடி விலை குறைப்பும்.
ஆப்பிள் மேப்ஸ்
மேலும் ஹைதராபாத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் அங்கு ஆப்பிள் மேப்ஸ் செயலியின் பணிகளைச் செய்ய இருப்பதாகக் கூறுகின்றது. இதனால் இங்கு 4,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
வருவாய்
2017 மார்ச் மாத காலாண்டு வரை ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஐபோன் உற்பத்தி நிறுவனத்தின் பெறும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications