ஜிஎஸ்டி-க்கு பின்னும் மக்கள் அவதி.. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக வரியாம்..!

ஜூலை1 இரவு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரியான, ஜிஎஸ்டி-யை ஒரு விழாபோலக் கொண்டாடி அறிமுகம் செய்து வைத்தது இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்தது. இதன் பின் சமுகவலைதளத்தில், மக்கள் மீது வரியை விதித்ததிற்கு விழா கொண்டாட்டமா என்றும் ஜிஎஸ்டி சாமானியர்களின் பணத்தை அதிகளவில் வரியாக பிடுங்குகிறது என திட்டித்தீர்த்து வருகின்றனர்.

உண்மையில் ஜிஎஸ்டி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற ஒன்றா என்பது குறித்து முழுமையாகத் தற்போது கணிக்க முடியாது. இன்னும் சில மாதங்களுக்குப் பின்னரே இதைப்பற்றி முழுமையாகப் பேசமுடியும்.

இந்நிலையில் உலகிலேயே அதிக அளவில் ஜிஎஸ்டி விதித்திருப்பது இந்தியா தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? அதோடு உலகில் முதல் முதலாக ஜிஎஸ்டி எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது தெரியுமா உங்களுக்கு. தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

முதல் முதலில்..

முதல் முதலில்..

உலகிலேயே முதல் முறையாகப் பிரான்ஸ் நாடு, தன் நாட்டில் வரி ஏய்ப்பை முழுமையாகத் தடுக்க ஜிஎஸ்டி வரியை முதல் முறையாக அறிமுகம் செய்தது.

இதன் பின் உலகில் சுமார் 140 நாடுகள் அமலாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகப் பிரேசிஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் 2 ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.

 

 இந்தியா

இந்தியா

தற்போது இந்தியா கனடா நாட்டில் இருப்பதைப் போல மத்திய மாநில அரசுகள் வரி விதிப்பு மற்றும் வசூல் செய்யும் உரிமை கொண்ட அமைப்பில் நாட்டில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இந்தப் பிரச்சனையில்லையாம், காரணம் இங்கு ஏழ்மையான குடும்பங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு அதனால் ஒரேயொரு ஜிஎஸ்டி வரி விதிப்பை மட்டுமே வைத்துள்ளது.

எல்லோருக்கும் ஒரே பார்மூலா தான்..

எல்லோருக்கும் ஒரே பார்மூலா தான்..

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றுவது ஒரே பார்மூலா தான். சில நாடுகள் வாட் எனக் கூறப்படும் மதிப்பு கூட்டு வரியையும், சில நாடுகள் ஜிஎஸ்டி வரி விதிப்பையும் கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் அவை சரக்கு மற்றும் சேவைக்காக மட்டுமே வசூல் செய்யப்படுகிறது.

ஜூலை 1

ஜூலை 1

ஜூலை 1 முதல் அமலாக்கம் செய்ப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரியின் மீது 0% முதல் 28% வரை விதிக்கப்படுகிறது.

இது உலகிலேயே இந்த ஒரு நாடுகளிலும் இல்லாத ஒன்று. ஜிஎஸ்டி நடைமுறையில் பிற நாடுகளில் இதன் நிலையைப் பாருங்கள்

கனடா

கனடா

இரட்டை ஜிஎஸ்டி வரி விதிப்புக் கொண்ட கனடாவில் இதன் பெயர் பெடரல் கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் மற்றும் ஹார்மோனைஸ்டு டாக்ஸ

இது 0% முதல் 15% வரை விதிக்கப்படுகிறது.

 

பிரிட்டன்

பிரிட்டன்


இங்கு இதனை மதிப்பு கூட்டி வரி என அழைக்கப்படுகிறது.

இது 0% முதல் 20% வரை விதிக்கப்படுகிறது.

 

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

பெயர்: கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ்

வரி: 0% முதல் 7% வரை

 

 மலேசியா

மலேசியா

பெயர்: கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ்

வரி: நிலையாக 6 சதவீதம்

 

அமெரிக்கா

அமெரிக்கா

அனைத்திற்கும் கைகாட்டும் அமெரிக்காவில் கூடச் சரக்கு மற்றும் சேவை வரி மிகவும் குறைவுதான்

வரி: 0% முதல் 11.725% வரை

ரஷ்யாவில் தனிநபர் அனைவருக்கும் நிலையான 13 சதவீத வரியாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வரி 10 முதல் 18 சதவீதமாக உள்ளது.

 

இந்தியாவிற்குப் பின்

இந்தியாவிற்குப் பின்

இப்பட்டியலில் ஹங்கேரியில் 27 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து கோராடியா, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அதிகப்படியாக 25 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

பின்லாந்து, கிரீஸ், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் அதிகபட்சமாக 24 சதவீகம் வரி விதிக்கப்படுகிறது.

 

குறைப்பு...

குறைப்பு...

சொல்லப்போனால் கனடாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகமப்படுத்திய நாள் முதல் சுமார் 2 முறை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில நாடுகள் குறைந்த அளவிலான வரி விதிப்பை அறிவித்து வர்த்தகச் சந்தையை மிகப்பெரிய அளவில் வளர்த்தியுள்ளது.

 

வளரும் இந்தியா..

வளரும் இந்தியா..

இந்தியாவில் உண்மையில் வளர்ச்சி பாதையில் கொண்டு செலவும், வர்த்தகச் சந்தையை விரிவாக்கவும், நாட்டில் இருக்கும் அனைத்து வியாபாரிகளையும் வரி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்மெனில் ஜிஎஸ்டி வரியை 20 சதவீதத்திற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

மத்திய அரசு..

மத்திய அரசு..

தற்போதைய மத்திய அரசு பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் என அனைத்து திட்டத்திலும் தோல்வியை அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து தனது தோல்வியை மறைக்கும் விதிமாக அடுத்தடுத்த அதிரடிகளைக் கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி தோல்வி அடைந்தால் அதனைச் சமாளிக்க அடுத்தத் திட்டமாக நிதியாண்டு மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+