ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இந்த வர்த்தக பாதிப்பில் ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உட்பட முன்னணி நிறுவனங்களும் அதிகளவில் பாதிக்கப்படுள்ள நிலையில் மாருதி சுசூகி மட்டும் இதில் இருந்து தப்பித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் சந்தையில் நிலவிய வரி மாற்றத்தின் காரணமாக கார்களின் விற்பனை அதிகளவில் சரிந்துள்ளது. இந்த சரிவில் மாருதி சுசூகி மட்டும் தப்பித்தது எப்படி..?
5 நிறுவனங்கள்
இந்தியாவில் 5 முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் வெறும் 1,59,938 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த வருடத்தின் அதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது சுமார் 9 சதவீதம் குறைவாகும்.
2 மாதம் தொடர்கிறது..
ஜூலை 1ஆம் தேதி அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி-யின் காரணமாக உற்பத்தியாளர்கள், சப்ளை செயின் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 2 மாதங்களாக மிகப்பெரிய அளவிலான வர்த்தக நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
வரி குறைப்பு..
மேலும் ஜிஎஸ்டியின் கீழ் நாட்டு மக்கள் அதிகம் வாங்கப்படும் சிறிய வகை கார்களின் மீதான வரி அதிகரிக்கவும், பெரிய கார்களின் மீதான வரி குறையும் நிலை உருவாகியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு அதிகம் லாபம் தரும் எஸ்யூவி ரக கார்களின் விற்பனை குறைந்துள்ளது.
மாருதி சுசூகி
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் பெலேனோ மற்றும் பிரீசா வகை கார்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக ஜிஎஸ்டி முன் சிறிய ரக காரான பெலேனோ சிறப்பான வர்த்தகத்தை அடைந்து இந்நிறுவனத்தை சரிவில் இருந்து காத்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இந்நிலையில் ஹூண்டாய் 5.6 சதவீத சரிவும், மஹிந்திரா 5.3 சதவீத சரிவும், டாடா மோட்டார்ஸ் 10.5 சதவீத சரிவும், டோயோட்டா நிறுவனம் 85 சதவீதம் வரையிலான சரிவை அடைந்துள்ளது.
டோயோட்டா
இந்திய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை சந்தையில் டாப் 5 இடங்களில் இருக்கும் டோயோட்டா கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 13,567 கார்களை விற்பனை செய்த நிலையில் இந்த மாதம் 1,973 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இது தான் பிரச்சனை..
ஜிஎஸ்டி வரியின் கீழ் முடிவு பெற்ற பொருட்கள் அல்லது தயாரிப்புகளை புதிய வரி சட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதேபோல் ஒரு வருடத்திற்கு பழைய தயாரிப்புகளை புதிய வரி அமைப்பிற்கு மாற்றும் போது அதிகளவிலான நஷ்டத்தை நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக தான் ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், பாக்கெட் உணவுகள் என அனைத்தும் ஜூலை 1ஆம் தேதிக்கு முன் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டது.
பிக் பஜார்
மேலும் சரக்கு இருப்பை குறைக்கு காரணமாக பிக் பஜார் ஜூன் 30ஆம் தேதி இந்தியாவில் இருக்கும் அனைத்து கிளைகளிலும் இரவு 12 மணி வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுவே கூடுதல் தள்ளுபடியை அறிவித்ததற்கும் காரணமாக அமைந்தது.
2வது நாளில் அமர்க்களம்
ஒரு பார்வை
பெரிய தலை
ஜியோவின் ஜிஎஸ்டி சேவை
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications