ஜூலை 1ஆம் தேதி அமலுக்க வந்த ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம், இந்திய பொருளாதார வளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறை ஆகியவற்றில் ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளுக்கு தொழிற்துறையில் பல சிக்கல்கள் காணப்படலாம் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.
சந்தை வல்லுநர்களைப் பொருத்த வரை ஒழுங்குபடுத்தப்படாத துறை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாறும் போதும் வேலைவாய்ப்பு உருவாக்கம் Z என்பது கேள்வியாகவே உள்ளது.
எனவே ஜிஎஸ்டி துறை வாரியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்குப் பார்ப்போம்.
நுகர் பொருள் துறை
இந்தியாவில் மிகப் பெரிய சந்தையாக இருக்கும் வேகமாக நுகரப்படும் பொருட்கள் துறை ஒழுங்குபடுத்தப்படாத துறையாக இருப்பதினால் இவர்களுக்கு இது அவர்களுக்கு மிகப் பெரிய பயனை அளிக்கும்.
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் எண்ணெய், சோப்பு, டூத்பேஸ்டு உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் கோல்கேட், எச்யூஎல், பிராட்டானியா, ஹெரிடேஜ் புட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அதிகப் பயனளிக்கும்.
பார்மா மற்றும் ஹெல்த்கேர்
மருத்துவப் பொருட்களின் வரி விகிதம் ஜிஎஸ்டி-ல் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் சுகாதாரத் துறையின் உள்ளீடுகள் 18 சதவீதத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டு செலவை அதிகரிக்கும்.
நுகர்வோர் சாதனங்கள்
நுகர்வோர் சாதனங்கள் மீது முன்பு 13.5 சதவீத வாட் வரியுடன் மொத்தமாக இருந்த 27 சதவீத வரி இன்று 27 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதனால் கிராப்டன், சும்போனி, வார்ல்பூல், ஹாவெல்ஸ் மற்றும் வோல்டாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் தங்களது தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்துமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
விமானப் போக்குவரத்துத் துறை
பிஸ்னஸ் கிளாஸ் விமான டிக்கெட் மீதான வரி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. அதே நேரம் எக்கானமி வகுப்பு டிக்கெட் கட்டணங்கள் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விமா போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
பங்கு சந்தை
சேவை வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களின் லாபத்தில் 3 சதவீதம் கூடுதலாக வரி செலுத்த வேண்டி வரும்.
சிமெண்ட்
கட்டுமான பொருட்கள் மீதான வரி 12.5 சதவீதத்தில் இருந்து ஜிஎஸ்டி-ல் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொலைத்தொடர்பு துறை
தொலைத்தொடர்பு துறையினைப் பொருத்த வரை பில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி விகிதம் உயத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சில டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கார்டுகளுக்கு வழங்கும் டாக் டைம்களைக் குறைத்துள்ள நிலையில் பயனர்களை இது பெறும் அளவில் பாதிக்கும்.
ஆட்டோ மொபைல்
ஆட்டோ மொபைல் துறையைப் பொறுத்தவரை 25 சதவீதம் ஹிஎஸ்டி மற்றும் 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் சிறிய ரகக் கார்கள் விலை குறைந்த அளவு சரிந்திருந்தாலும் பிரீமியம் ரகக் கார்களின் விலை அதிக அளவு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட்
ஒருபக்கம் கட்டுமான பொருட்கள் மீதான விலை ஜிஎஸ்டி வரி விகித உயர்வால் அதிகரித்து வரும் நிலையில் கட்டிய பிறகு விற்கப்படும் வீடுகளின் மீது 12 சதவீத வரியில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி-ல் உயர்த்தப்பட்டதால் விலை உயர் வாய்ப்புள்ளது.
2வது நாளில் அமர்க்களம்
பெரிய தலை
ஜியோவின் ஜிஎஸ்டி சேவை


Click it and Unblock the Notifications