போட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..!

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் இந்திய வர்த்தகச் சந்தை புதிதாகத் துவங்கியுள்ளது. இப்புதிய வர்த்தக முறையில் நாடு முழுவதும் ஓரே வரி எனவும் மாநிலங்கள் மத்தியில் இருக்கும் வர்த்தக நெக்கடி, வரி விதிப்பு என எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயங்கும் என நம்பப்படுகிறது.

தற்போது ஜிஎஸ்டி வரியில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வரி விதிப்புகள் உள்ளது.

இப்புதிய வரி விதிப்புகள் சந்தையில் பல மாற்றங்களை 2வது நாளிலேயே கொண்டு வந்துள்ளதும். ஆம், பல முன்னணி நிறுவனக்கள் தங்களின் தயாரிப்புகளுக்கான விலையைக் குறைந்துள்ளது, இதற்கான அறிவிப்பைத் தத்தம் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

எந்தெந்த நிறுவனங்கள், துறைகள் எவ்வளவு விலையைக் குறைத்துள்ள என்பதை இப்போது பார்ப்போம்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

ஜூன் மாதத்தில் 85 சதவீத விற்பனையை இழந்த டோயோட்டா தனது கார்களின் விலையை 13 சதவீதம் வரை குறைத்துள்ளது.

அதபோல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனகளின் விலையை 400 முதல் 4000 ரூபாய் வரை குறைத்துள்ளது.

அடுத்தச் சில நாட்களில் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், போர்டு ஆகிய நிறுவங்கள் மாருதி சுசூகியின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டு அதன் பின் விலை குறைப்பை அறிவிக்கும்.

 

நுகர்வோர் சந்தை

நுகர்வோர் சந்தை

நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் வர்த்தகச் சந்தையைக் கொண்ட ஹிந்தூஸ்தான் யூனிலீவர் பல பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. அதேபோலப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாதவற்றுக்கு எடையை அதிகரித்துள்ளது.

நெஸ்லே நிறுவனம் மேகி கெட்சப், செர்லாக் மற்றும் சில பால் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காட்ரேஜ் நிறுவனம் தனது முக்கியத் தயாரிப்பான சோப்-இன் விலையைக் குறைக்கவோ அல்லது எடையைக் கூட்டவோ செய்யும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவே கம்பீர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெப்சி, மாரிகோ, பார்லே மற்றும் பிசிலெரி ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தனது பொருட்களுக்கான விலையை ஜூலை 1ஆம் தேதிக்குப் பின் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

எலக்ட்ரானிக் பொருட்கள்

எலக்ட்ரானிக் பொருட்கள்

ஜிஎஸ்டி வரியின் கீழ் டிவி, பிரிட்ஜ், ஏசி மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விலை 2.5 சதவீதம் வரை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. முன்னணி நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை தயார் செய்து வருகிறது.

உதாரணம்

உதாரணம்

42இன்ச் எல்ஈடி டிவி 40,000 ரூபாயில் இருந்து 40,900 ரூபாய்க்கு உயரும்.
280லிட்டர் பிரிட்ஜ் 26,000 ரூபாயில் இருந்து 26,500 ரூபாய்க்கு உயரும்.
ஏசி ரகம் வாரியாக 400 முதல் 1000 ரூபாய் வரை உயரும்.

சந்தையில் தற்போது இருக்கும் விலையை விட எலக்ட்ரானிக் பொருட்களின் விலை சராசரியாக 1.5 முதல் 2 சதவீதம் வரை உயரும்.

 

வெண்ணெய், பன்னீர், நெய்

வெண்ணெய், பன்னீர், நெய்

அமுல் நிறுவனம் தனது சீஸ் (cottage cheese), குழந்தைகளுக்கான பால் பொருட்களின் விலையைக் குறைத்துள்ள நிலையில், நெய் விலையை உயர்த்தியுள்ளது.

மேலும் சாதாரணச் சீஸ், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலை மாற்றப்படவில்லை.

 

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

ஊறுகாய், ஜாம், கெட்சப் ஆகியவற்றின் விலை ஜிஎஸ்டி கீழ் உயர்ந்துள்ளது. மேலும் பிராண்டட் அரிசி மற்றும் கோதுமை மாவு விநியோகஸ்தராகளுக்குப் புதிய வரி விதிப்பில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

டிவிஎஸ்

டிவிஎஸ்

ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட்

ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட்

ஒரு பார்வை

ஒரு பார்வை

பெரிய தலை

பெரிய தலை

ஜியோவின் ஜிஎஸ்டி சேவை

ஜியோவின் ஜிஎஸ்டி சேவை

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+