இரண்டு சக்கர வாகனம் தயாரிப்பில் ஈட்பட்டு வரும் டிவிஎஸ் மொடார் நிறுவனம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து தனது தயாரிப்பு வாகனங்களின் விலையினை 350 ரூபாய் முதல் 4,150 ரூபாய் வரை குறைத்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தைப் பொருத்த வரை இந்த விலை குறைப்பு கம்யூட்டர் மற்றும் பிரீமியம் செக்மெண்ட் வாகனங்களைப் பொருத்து குறைவாகவும், அதிகமாகவும் உள்ளது.
கம்யூட்டர் வாகனங்கள்
டிவிஎஸ் எக்சல், ஜூப்பிட்டர் போன்ற கம்யூட்டர் செக்மெண்ட் வாகனங்களின் விலையினை 350 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
பிரீமியம் வாகனங்கள்
பிரீமியம் செக்மெண்ட் வானங்களின் விலையினை 4,150 ரூபாய் வரை டிவிஎஸ் குறைத்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு ஒவ்வொரு மாநிலத்தினைப் பொருத்தும் மாறும்.
டிவிஸ் நிறுவனத்தின் டீலர்களுக்கான ஆதரவு
இதற்காக டிவிஎஸ் நிறுவனம் 2017 ஜூலை 1 முதல் டீலர்களுக்கு ஸ்டாக்கினை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு டீலர்கள் பெற்ற வாகனங்களை விற்பனை செய்யவும் தங்களது ஆதரவை அளித்துள்ளது.
ஹீரோ மோடோ கார்ப்
இந்தியாவின் மற்றோரு பைக் நிறுவனமான ஹீரோ மோடோ கார்ப் நிறுவனம் தங்களது தயாரிப்பு வாகனங்களின் விலையில் 1,800 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாகனங்களின் விலையும் மாநிலங்களைப் பொருத்து மாறும்.
பிற நிறுவனங்கள்
ஏற்கனவே பிற வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி, டோயோட்டா, ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜிஎஸ்டி-ன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications