சென்ற மாதம் டிவி, குளிர்சாதனப் பெட்டி போன்ற எலக்டிரிக், எலக்டிரானிஸ் பொருட்களை நுகர்வோர் சாதன நிறுவன கடைகளில் குறைந்த விலை பல ஆஃபர்களுடன் விற்கும் போது வாங்கவில்லையா?
இப்போது வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளன.
எல்ஜி
நுகர்வோர் சாதனங்கள் சந்தையைப் பொருத்த வரை எல்ஜி நிறுவனம் தான் முதல் ஆலாக டிவி விலையினை உயர்த்தியுள்ளது. எல்ஜி நிறுவனம் எல்ஈடி டிவி, எல்ஜி ஸ்மார்ட் எல்ஈடி செட்கள் முதல் எல்ஜி யூஎச்டி எல்ஈடி செட்கள் எனப் பலவற்றுக்கு டீலர்களான விலையில் 1.3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விலை உயர்த்தியுள்ளன. இதுவே டெல்லி மற்றும் புறநகர் டெல்லியில் 2 சதவீதமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் விலை ஏற்றத்தை உறுதி செய்த விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் நிலேஷ் குப்தா நுகர்வோர் சாதனங்கள் பொருட்களின் விலையினை உயர்த்தி எல்ஜி நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பானசோனிக்
பானசோனிக் நிறுவனமும் டிவி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்களின் விலையினை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பானசோனிக் நிறுவன தயாரிப்புகளின் விலை உயர்வு குறித்து முடிவுகள் இந்த வார இறுதியில் எடுக்கப்படும் என்று பானசோனிக் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் பிரிவின் இயக்குனர் அஜய் சேத் கூறினார்.
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி பானசோனிக் நிறுவன தயாரிப்புகளின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம்.
சம்சாங்
சம்சாங் நிறுவனம் உடனடியாகத் தங்களது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தப்போவதில்லை என்று அறிவித்து இருந்தாலும் நமக்குக் கிடைத்த தகவலின் படி குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற சில தயாரிப்புகளின் விலையினை 1 முதல் 2 சதவீதம் ஜிஎஸ்டிக்கு பிறகு உயர்த்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சோனி
சோனி நிறுவனத்தில் விலை ஏற்றம் பற்றி எந்த முடிவும் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது. இப்போது வரை நாங்கள் ஜிஎஸ்டி அமல் படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அதனால் டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை தற்போதைக்கு உயராது என்று இந்திய சோனி பிரிவின் தலைமை விற்பனை அதிகாரி சதீஷ் பத்மநாபன் தெரிவித்தார்.
எச்பி
கணினி மற்றும் பிரிண்ட்டர் தயாரிப்பு நிறுவனமான எச்பி லேப்டாப் பிரிவில் எச்பி நோட்புக் மற்றும் எச்பி பெவிலியன் நோட்புக் விலையில் 2 சதவீதம் வரை உயத்தியுள்ளதாக விஜய் சேல்ஸ் தரப்பு நமக்குத் தெரிவித்துள்ளனர்.
லெனோவா
லெனோவா நிறுவனம் ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அதில் பெரிய தாக்கம் ஏதும் இல்லை என்றால் விலை ஏற்றப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு முன்
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன் சென்ற மாதம் நுகர்வோர் சாதனங்கள் பிரிவில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஷோரூம்கள் சலுகைகளினை வாரி வழங்கின.
ஜிஎஸ்டி வரி விகிதம்
ஜூலை 1ம் தேதிக்கு முன்பு 27 முதல் 27 சதவீதம் வரை இருந்த நுகர்வோர் சாதனங்கள் பொருட்கள் மீதான வரி இப்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் சில நிறுவனங்கள் விலை ஏற்றத்தைச் செய்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications