டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு புதன்கிழமை முதல் பயணிகள் வாகனங்களின் மீதான விலையினை 3,300 ரூபாய் முதல் 2,17,000 ரூபாய் வரை குறைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் பயணிகள் வாகன வணிகப் பிரிவின் தலைவர் மயான்க் பாரிக் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை வரவேற்பதாகக் கூறியுள்ளார். ஜிஎஸ்டி வருகையால் வணிகம் செய்வது எளிமையாகும் என்றும் வேகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
12 சதவீத விலை குறைப்பு
எனவே வாகனங்களின் விலைகளில் 12 சதவீதம் அதாவது 3,300 ரூபாய் முதல் 2,17,000 ரூபாய் வரை விலையினை வாகனங்களின் மாதிரிகளைப் பொருத்து குறைத்துள்ளது.
ஆர்வத்தைத் தூண்டும்
இதனால் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இந்த விலை குறைப்பு இருக்கும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது என்று டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.
பிற நிறுவனங்கள்
மாருதி சுசூகி, ஃபோர்டு, ஹோண்டா கார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் 2017 ஜூலை 1 அன்று ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததன் முதல் தங்களின் நான்கு சக்கர வாகன தயாரிப்புகளின் விலையினை மாற்றி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications