இந்திய வரியமைப்பில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 5 நாட்கள் முழுமையாக முடிந்த நிலையில், ஒவ்வொரு துறையிலும் வர்த்தகத்திலும் ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்த சந்தேகம் தற்போது சிகரெட் மீதான வரி விதிப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்து புகைப்பிடிப்போர்களை மகிழ்வித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அமைப்பு
பழைய வரி விதிப்பின் கீழ் சிகரெட் மீது விதிக்கப்பட்டு கூடுதல் வரி விதிப்புகள் ஜிஎஸ்டியில் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிகரெட் மீதான வரியில் 7-9 சதவீதம் வரை தற்போது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரொலிகள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து இந்தியாவில் சிகரெட் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியாக திகழும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 353.20 என்ற உயரிய விலையை அடைந்தது. இதேபோல் காட்பிரெ பிலிப்ஸ் மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களும் தத்தம் 3.4 சதவீதம், 4.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வரி மாற்றம்..
பழைய வரி விதிப்பின் கீழ், சிக்ரெட் 18 சதவீதம் வரியும், கூடுதல் 5 சதவீத செஸ் வரியும், சிகரெட்-இன் அளவை பொருத்து விதிக்கப்படும் வரி ஆகியவை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஜிஎஸ்டி கீழ் சிகரெட் 28 சதவீத வரி விதிப்பின் கீழ் வந்துள்ளது. இதன் பின்னும் பழைய நடைமுறையில் இருக்கும் வரிகள் தொடர்ந்து விதிக்கப்படுமா என்ற சந்தேகம் பெரிய அளவில் இருந்தது.
தீர்வு
இந்த குழப்பத்திற்கு மத்திய கலால் வரித்துறை கூறுகையில், கூடுதல் கலால் வரி, செஸ் வரி ஆகியவை ஜிஎஸ்டி கீழ் இருக்காது.
ஆனால் தேசிய பேரழிவு கட்டுப்பாட்டு கட்டணம் தொடரும் என தெளிவுப்படுத்தியுள்ளது.
வரி குறைந்தது
இதன் மூலம் ஜிஎஸ்டி கீழ் சிகரெட் மீதான வரி விதிப்புகள் பழைய முறையை ஒப்பிடுகையில் சுமார் 7-9 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மொத்த வரி விதிப்பு அதிகரித்தாலும், பழைய முறையிலான கூடுதல் வரிகள் இதில் நீக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications