புதிய வீட்டுகளின் விலை 20% சரிவு: ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி.. மக்கள் மகிழ்ச்சி..!

ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து துறைகளிலும் முழுமையாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக புதிய வீட்டுகள் அல்லது அப்பார்ட்மென்ட் விலைகள் தற்போது 20 சதவீதம் வரை குறையும் என புதிய ஆய்வு கூறுகிறது.

ஆம், ஜிஎஸ்டிக்கு பின் பில்டர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு இன்புட் டாக்ஸில் பல தளர்வுகள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வீடுகள் மற்றும் அப்பார்மென்ட்களின் விலை குறைந்தபட்சம் சுமார் 20 சதவீதம் வரை குறையும்.

ஜிஎஸ்டிக்கு முன்னும் பின்னும்...

ஜிஎஸ்டிக்கு முன்னும் பின்னும்...

புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்யும்போது 12 சதவீத சேவை மற்றும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் ஆகியவற்றை பில்டர்கள் செலுத்த வேண்டும். இதில் ஸ்டாப் டியூட்டி தனி..

ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் இன்புட் டாக்ஸ் கிரெடிட்-இன் முழுமையான பயன் பில்டர்களுக்கு கிடைக்கும் நிலையில், வீட்டுகளின் விலை சுமார் 20 சதவீதம் வரை குறையும் என இந்த ஆய்வு கூறுகிறது.

 

பிர்லர்கள் தரப்பு...

பிர்லர்கள் தரப்பு...

ஆனால் ஜிஎஸ்டிக்கு பின் வீடுகளின் விலை இதே இன்புட் டாக்ஸ் கிரெடிட்-ஐ காரணம் காட்டி பிர்லர்கள் தரப்பு இதன் விலை சுமார் 20-25 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளனர்.

உண்மை..

உண்மை..

ஆனால் இதன் உண்மையான பலன் பில்டர்களின் கையில் தான் உள்ளது. பிர்லர்கள் அல்லது பிரமோட்டர்கள் எவ்வளவு சிறப்பாக இன்புட் டாக்ஸ் கிரெடிட்-ஐ வாங்க முடிகிறதோ அதன் பலன்களை வாங்குவோருக்கு கிடைக்கும். இதுவே தற்போதைய உண்மையான நிலை.

கட்டுமானத்தில் இருக்கும் வீடுகள்..

கட்டுமானத்தில் இருக்கும் வீடுகள்..

அதேபோல் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் வீடுகள் அனைத்திற்கும் பில்டர்கள் சேவை வரி, வாட் என அனைத்தையும் செலுத்திவிட்ட நிலையில், இதற்கான இன்புட் டாக்ஸ் கிரெடிட் சலுகையை பெற முடியாது. இதனால் ஏற்கனவே நீங்கள் புக் செய்யப்பட்ட வீட்டிற்கு சலுகை கிடைக்காது.

பாதி பாதி..

பாதி பாதி..

மேலும் பல இடங்களில் ஒரு பிராஜெக்ட் பாதி கட்டுமானத்திலும் பாதி விற்பனை செய்யப்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் சலுகை கிடைக்கும்.

ஆதாவது ஜூலை 1ஆம் தேதிக்கு பின் செலுத்தப்படும் வரி, ஈஎம்ஐ ஆகியவற்றிக்கு இந்த சுலுகை கிடைக்கும். மேலும் வீட்டை வாங்குவோர் எஞ்சியுள்ள ஈஎம்ஐக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் செலுத்த வேண்டும்.

 

 90-95 சதவீதம் முடிவு பெற்ற திட்டங்கள்

90-95 சதவீதம் முடிவு பெற்ற திட்டங்கள்

அதேபோல் 90-95 சதவீதம் முடிவு பெற்ற திட்டங்களுக்கு மீதமுள்ள 5-10 சதவீத தொகைக்கு மட்டுமே இன்புட் டாக்ஸ் கிரெடிட் சலுகை கிடைக்கும். இதேபோல் வீட்டை வாங்குவோம் மீதமுள்ள தொகைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

வீட்டு கடன்

வீட்டு கடன்

ஜிஎஸ்டி வரி நிதி சேவையில் அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீட்டுக்கடனுக்கான பிராசசிங் கட்டணமும் உயரும் என்பதில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு உடையோருக்கு கசப்பான விஷயமாக உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் நிதி சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

கருப்பு பணம்

கருப்பு பணம்

பொதுவாக இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் கருப்பு பணம் புழங்குவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஆகையால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் யார்யார், எவ்வளவு தொகை இத்துறையில் முதலீடு செய்கிறார்கள் என்பதை நேரடியாக கணக்கிட முடியும் வகையில் ஜிஎஸ்டி அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இத்துறையில் கருப்பு பணம் புழங்குவதை அதிகளவில் குறைக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது.

 

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்



 

மிரளவைக்கும் வருமானம்

மிரளவைக்கும் வருமானம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+