இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதள வங்கி சேவை, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தல், எஸ்பிஐ பட்டி உள்ளிட்ட சேவைகளின் பரிவர்த்தனை கட்டணங்களில் ஜூன் 1 முதல் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததை அடுத்துக் கட்டணங்களில் சேவை வரிப் பிடித்தம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் சில மாற்றங்களைப் பரிவர்த்தனை கட்டணங்களில் நிகழ்ந்துள்ளது.
சேவை வரி
ஜிஎஸ்டி-ன் கீழ் வங்கி சேவைகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்குகள்
சாதாரன வங்கி சேமிப்பு கணக்குகளை நீங்கள் மெட்ரோ நகரங்களில் வைத்து இருந்தால் மாதம் 5 முறை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் 3 முறை பிற வங்கி ஏடிஎம்களில் என 8 முறை இலவசமாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதுவே மெட்ரோ நகரங்கள் அல்லாது வங்கி கிளைகளில் சாதாரன சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் போது மாதம் 5 முறை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் 5 முறை பிற வங்கி ஏடிஎம்களில் என 10 முறை இலவசமாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள்
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் அளிக்கப்பட்டுள்ள இலவச வரம்பைத் தாண்டி செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போது 20 ரூபாய் மற்றும் வரியைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும்.
அடிப்படை சேமிப்பு கணக்கு
மாதத்திற்கு 4 ஏடிஎம் பரிவத்தனை மட்டுமே இலவசம் என்ற வரம்பு அடிப்படை சேமிப்பு டெபாசிட் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ஆகும். எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கு ஏழை மக்களும் கட்டணங்கள் ஏதும் இன்று வங்கி கணக்கை திறந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக ஆண்டுக் கட்டணம் இல்லாமல் வங்கி கணக்கு சேவை அளிக்கப்படும். இந்தக் கணக்கை வைத்துள்ளவர்களால் கூடுதலாக வேறு ஒரு எஸ்பிஐ வங்கி கணக்கை வைத்துக்கொள்ள முடியாது.
இணையதளப் பரிவர்த்தனை
இணையதள வங்கி சேவையில் IMPS வாயிலாக 1 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யும் போது 5 ரூபாய் மற்றும் வரியும், 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 15 ரூபாய் மற்றும் வரியும், 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 25 ரூபாய் மற்றும் வரியும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்
20 சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் அல்லது அதன் பதிப்பு 5,000 ரூபாய் வரை என்று இருந்தால் 2 ரூபாய் மற்றும் வரியை ஒவ்வொரு ரூபாய் நோட்டிற்கும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
செக் புக்
10 தாள் உள்ள செக் புக்கிற்கு 30 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி, 25 தாள் உள்ள செக் புக்கிற்கு 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி, 50 தாள் உள்ள செக் புக்கிற்கு 150 ரூபாய் உடன் ஜிஎஸ்டி வரியைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஏடிஎம் கார்டு கட்டணனக்கள்
ஜூன் 1 முதல் புதிய ஏடிஎம் கார்டுகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். ரூபே கிளாசிக் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
எஸ்பிஐ பட்டி
எஸ்பிஐ பட்டி செயலியின் உதவியுடன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் 25 ரூபாய் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும்.
இதுவே எஸ்பிஐ பட்டி செயலி உதவியுடன் வங்கி சேமிப்பு கணக்கிற்குப் பணத்தை மாற்றும் போது 3 சதவீத கட்டணம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரிப் பிடித்தம் செய்யப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications