ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின், பெரிய பெரிய நிறுவனங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இது பலரை பாதிக்கும் அளவிற்கு உள்ளது.
20 லட்சம் ரூபாய்
வீட்டுக் குடியிருப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டியில் விளக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்திற்காக இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவோர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஓரு கண்டிஷன்
ஆனால் வர்த்தகத்திற்காக வாடகைக்கு விடும் வருமான அளவு 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி மாதம் 1.7 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் அனைவரும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வரி செலுத்த வேண்டும்.
பதிவு..
இதன் மூலம் வருடம் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வாடகை வருமானம் பெறும் அனைவரும் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்ய வேண்டும்.
குறைவான தொகை..
20 லட்சத்திற்கும் குறைவாக வாடகை வருமானம் பெறுவோர் நேரடி வரி விதிப்பின் கீழ் தங்களது வருமானத்தைக் காட்டி வருமான அளவிற்கு ஏற்ற வரியைச் செலுத்த வேண்டும்.
அடுத்தக் கட்ட திட்டம்..
இந்நிலையில் மத்திய அரசு மறைமுக வரி அமைப்பைச் சீர்திருத்தம் செய்ததைப் போல் அடுத்தக் கட்ட திட்டமாக நேரடி வரி விதிப்பையும் முழுமையாகத் திருத்தம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது, ஆனால் அரசு தரப்பில் இதுகுறித்து எவ்விதான அறிவிப்பையும் வெளியிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி விபரம்..
பழைய வரி அமைப்பின் கீழ் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் இருக்கும் நிலையில், புதிய ஜிஎஸ்டி வரித் தளத்தில் தற்போது 69.32 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதில் 38.51 லட்சம் பேர் தங்களது முழுமையான பதிவு மற்றும் சான்றிதழை பெற்றுள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications