டாடா கன்சல்டன்சி நிறுவனம் லக்னோவில் உள்ள தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மூட முடிவு செய்துள்ளது என்று ஊழியர்களிடம் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றது.
இந்த முடிவைப் புதன் கிழமை டிசிஎஸ் நிர்வாகம் குழு தலைவர்கள் மூலமாக ஊழியர்களுக்குத் தெரிவித்த தெரிவித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
எப்போது?
டிசிஎஸ் நிறுவனத்தின் அந்த அறிவிப்பின் படி இந்த வருடத்தின் இறுதிக்குள் லக்னோவில் செயல்படும் பல திட்ட பனிகள் நொடாவிற்கு மாற்றப்படும்.
2000 ஊழியர்கள் நிலை பரிதாபம்
இதனால் இங்கு வேலை செய்யும் 2,000 ஊழியர்களில் 50 சதவீத பெண்களின் நிலை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தினைத் தொடர்புகொண்டு முயன்ற போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்க்குக் கடிதம்
லக்னோவில் பணிப்புரியம் ஊழியர்கள் உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இதில் தலையிட வேண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மோடிக்குக் கடிதம்
அதுமட்டும் இல்லாமல் பிரதமர் மோடி, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் உத்திர பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா ஆகியோருக்கு ஊழியர்கள் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டிசிஎஸ் லக்னோ
லக்னோவில் அமைந்துள்ள டிசிஎஸ் அலுவலகம் 33 வருடங்களாகச் செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications