வருவாய் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் பழைய நகைகள், வாகனங்கள் போன்றவற்றைத் தனிநபர்கள் விற்பனை செய்யும் போது ஜிஎஸ்டி கிடையாது என்று அறிவித்துள்ளது. இதுவே வணிகம் என்றால் 3 சதவீதம் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும்.
வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் பழைய நகைகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து கடைக்காரர் வாங்கும் போது 3 சதவீதம் ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 9 (4) இல் உள்ள விதிகளின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
தனிநபருக்கு வரி இல்லை
வாதத்திற்கு வந்துள்ள இந்த அறிவிப்பினால் தனிநபர் ஒருவர் நகையினை விற்கின்றார் என்றால் அது ஒன்றும் வணிகம் அல்ல அதனால் இதற்கு ஜிஎஸ்டி வரி தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.
இருவருக்கும் வரி கிடையாது
"அதன்படி, தங்க நகைகளை விற்பனையாளர் ஒருவரிடம் தனிநபர் விற்பனை செய்தால், பிரிவு 9(4) இன் கீழ் நகை கடைக்காரர் அல்லது வாடிக்கையாளர் இருவருக்கும் வரி கிடையாது என்று வருவாய் துறை கூறுகின்றது.
வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தும்
வருவாய் துறை அதிகாரிகள் இந்த விதிகள் பழைய கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்களை விற்கும் போதும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இதுவே ரிவர்ஸ் சார்ஜ் முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்க நகையினைக் கடைக்காரர் வாங்கும் போது ஜிஎஸ்டி 3 சதவீதம் செலுத்த வேண்டும்.
எப்போது வரி விதிக்கப்படும்
வியாபாரத்திற்காக விற்காமல் விற்பனை செய்வதால் வரி எதுவும் பொருந்தாது. இருப்பினும் பதிவு செய்யப்படாத வியாபாரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட சப்ளையருக்கு தங்க ஆபரணங்களை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படும்.
"எனினும், தங்க ஆபரணங்களைப் பதிவுசெய்யாத விற்பனையாளர் அதைப் பதிவு செய்த வணிகர்களுக்கு விற்கிறார் என்றால், RCM கீழ் வரி விதிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications