இந்தியாவில் உள்ள 51 வங்கிகளிலும் 2014-2015, 2016-2017 எனக் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் திருட்டு, மோசடி, கொள்ளை என 2,632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
அதில் என்ன சிக்கல் என்றால் வங்கிகளுக்கு இந்தப் புகார்களினால் 180 கோடி வரை நட்டம் என்பது ஆகும். இதனை நேற்றைய மக்களவை கூட்டத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
கடந்த மூன்று நிதியாண்டில் வங்கிகளில் 344 திருட்டு, கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.30 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று மாநிலங்களவை நிதி அமைச்சர் சந்தோஷ் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆ பரோடா
பாங்க் ஆ பரோடா வங்கி 188 புகர்களினால் 13 கோடிகள் வரை இழப்பைச் சந்தித்துள்ளது.
தனியார் துறை வங்கிகள்
தனியார் துறை வங்கிகளில் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி உள்ளிட்டவற்றிற்கு முறையே 17.25 கோடி, 37.34 கோடி மற்றும் 10.21 கோடி இழப்பு நேர்ந்துள்ளது.
ஆர்பிஐ கோரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே இந்த வங்கிகளுக்குத் தங்களது வங்கி மற்றும் ஏடிஎம் கிளைகளில் பாதுகாப்பு ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது என்று கோரிக்கை வைத்துள்ளதாகக் கங்வார் தெரிவித்தார்.
மேலும் ஆர்பிஐ வங்கிகளிடம் ஏதேனும் திருட்டு, மோசடி, கொள்ளைப் புகார்கள் மற்றும் சம்பவங்கள், வங்கி லாக்கர் சேவையில் திருட்டு நேர்ந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இழப்பீடு
வங்கி லாக்கர்களில் இருந்து பொருட்களைக் காணாமல் போகும் போது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடவில்லை.
பாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளின் கடமை
"இருப்பினும், வங்கிகள் லாக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது வங்கிகளின் பொறுப்பு என்றும், லாக்கர் வைத்திருப்பவர்கள் கோரிக்கைகளுக்குப் பொறுப்பாக வங்கிகளுக்கு வழங்கக்கூடிய லாக்கருடைய பாதுகாப்பிற்காக எந்தவித தயக்கமும் இல்லை என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications