இந்தியாவில் 2வது மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி ஜூன் மாத காலாண்டில் 3,894 கோடி ரூபாய் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 20.2 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் எச்டிஎப்சி வங்கி 3,239 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருமானம்
வட்டி வருமானத்தின் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் 9,370 கோடி ரூபாய், இது வங்கி டெப்பாசிட் செலுத்தப்பட்டுவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பின்னான தொகை. இது மார்ச் காலாண்டை விடவும் 20.4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வராக் கடன்
அதேபோல் எச்டிஎப்சி வங்கியின் வராக் கடன் தொகை 0.33 சதவீதத்தில் இருந்து ஜூன் காலாண்டில் 0.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வராக் கடன் குறித்த இவ்வங்கியின் அறிவிப்பில் விவசாயத்துறை அளிக்கப்பட்ட கடன் அளவில் வராக்கடன் ஜூன் காலாண்டில் 60 சதவீதமாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
வைப்புத் தொகை
வங்கியில் டெப்பாசிட் தொகையின் அளவு ஜூன் காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்து 6.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இருப்பு நிலை
வங்கியின் மொத்த இருப்பு நிலை அறிக்கை ஜூன் காலாண்டில் 8.95 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதன் அளவு 7.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications