இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்கு ஸ்னாப்டீல் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக முதலில் 800-850 மில்லியன் டாலர்கள் தோராயமாக 5,500 கோடி ரூபாய் கொடுக்குப் பிளிகார்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க ஸ்னாப்டீல் நிறுவனம் மறுத்து விட்டது.
6,150 கோடி ரூபாய்
இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தினை 900 மில்லியன் முதல் 950 மில்லியன் ரூபாய் அதாவது 6,150 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க பிளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்தது. இந்த டீலுக்கு ஸ்னாப் டீல் நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
1 பில்லியன் டாலர்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய ஆஃபர் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ரூபாயினை நெருங்கி உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் முடிந்து கையெழுத்து ஆகும் வரை பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை இரண்டு நிறுவனங்களும் வெளியிடத் தாயாராக இல்லை.
இரண்டாவது ஆஃபர்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 900-950 மில்லியன் டாலர் டீல் ஆபர் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று தெரிகின்றது.
பதில் அளிக்க மறுத்த நிறுவனங்கள்
இது குறித்து ஸ்னாப்டீல், சாப்ட் பாங்க் மற்றும் பிளிகார்ட் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கேட்டபோழுது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
முதல் ஆஃபரை தவிர்த்த ஸ்னாப்டீல்
பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள 800-850 மில்லியன் டாலர் குறைவானது என்று ஸ்னாப்டீல் மறுத்துள்ளது.
சாப்ட் பாங்க்
கடந்த சில மாதங்களாக ஸ்னாப்டீல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர் நிறுவனமான சாப்ட் பாங்க் விற்பனைக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பிரீசார்ஜ்
மறுபக்கம் ஸ்னாப்டீல் நிறுவனம் தங்களது மொபைல் வாலெட் பிரிவான பிரீசார்ஜ் நிறுவனத்தை விற்கும் பணிகளையும் ஒருபக்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த டீல் எல்லாம் அடுத்த வாரம் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்தியாவின் இ-காமர்ஸ் துறையின் முக்கிய நிகழ்வு
பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் இடையிலான இந்த டீல் முடிந்தால் இந்தியாவின் இ-காமர்ஸ் துறையில் நடைபெற்ற மிகப் பெரிய கையகப்படுத்தல் என்ற பெயர் கிடைக்கும்.
வலுவான போட்டியில் தோல்வி
இந்திய இ-காமர்ஸ் பிரிவில் முன்னணி போட்டியாளர்களில் ஒருவரான ஸ்னாப்டீல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இருந்து வந்த வலுவான போட்டியைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைக் கண்டுள்ளது.
சரிந்த மதிப்பு
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மதிப்பீடும் 2016-ம் ஆண்டு இருந்த 6.5 பில்லியன் டாலரில் இருந்து மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சாப்ட்பாங்க் நிறுவனமும் தன்னுடைய முதலீட்டில் இருந்து 1 பில்லியன் டாலரினை திரும்பப்பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications