புண்பட்ட நெஞ்சை இனி புகைவிட்டு கூட ஆத்த முடியாது..!!

ஏற்கனவே சிகரெட் ஜிஎஸ்டி வரி விதிப்பில் 28 சதலீத வரியாக இருக்கும் போது, சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி கவுன்சில் சிக்ரெட் மீது கூடுதல் வரியை விதித்தது. இதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஐடிசி நிறுவன பிராண்ட் சிக்ரெட்டின் விலை 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் ஐடிசி தயாரிக்கும் பல்வேறு அளவு மற்றும் வகையான 25 சிகரெட்களின் விலை தற்போது குறைந்தபட்சமாக 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

முக்கிய பிராண்டுகள்

முக்கிய பிராண்டுகள்

ஐடிசி பிராண்ட் மட்டும் அல்லாலமல் கிளாசிக், கோல்டு பிலேக், நேவி கட், பிரிஸ்டோல், பிலேக், சிஸ்சஸர்ஸ் மற்றும் கேப்ஸ்டன் ஆகிய பிராண்டு சிகரெட் விலையும் அதிகரித்துள்ளது.

அதிகளவிலான உயர்ந்து

அதிகளவிலான உயர்ந்து

இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் கிளாசிக் மற்றும் கோல்டு பிளேக் கிங்ஸ் ஆகியவற்றின் விலை தான் அதிகமான அளவிற்கு உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின் கணிசமான அளவிற்கு மட்டுமே இதன் விலை உயர்ந்த நிலையில், கூடுதல் செஸ் வரிக்குப் பின் அதிகமான அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கீழ் சிகரெட் மீது 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன்பின் நாட்டின் புகைபிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதன் மீது கூடுதல் செஸ் விதித்தது ஜிஎஸ்டி கவுன்சில்

இதன் மூலம் சிகரெட் மீதான வரி 11-15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதிலும் கிங் சைஸ் பிரிவில் இருக்கும் சிகரெட் மீதான வரி 21 சதவீதம் வரை உயர்ந்து மக்களை அதிரவைத்துள்ளது.

 

300 ரூபாய்

300 ரூபாய்

தற்போது சந்தையில் சராசரியாக 20 சிகரெட் கொண்டு கிளாசிக் மற்றும் கோல்டு பிளேக் கிங்ஸ் பிராண்டு சிகரெட் விலை 300 ரூபாய். முன்பு இதன் விலை 278 ரூபாய்.

10 சிகரெட் கொண்ட நேவிகட் பில்டர் சிகரெட் பெட்டி 89 ரூபாயில் இருந்து 94 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

மோசடி

மோசடி

இந்நிலையில், கடைகளில் இருக்கும் பழைய இருப்புக்கு அதிகமான தொகை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல கடைக்காரர்கள் இதனை மிகப்பெரிய அளவில் மோசடி செய்கின்றனர்.

ஐடிசியின் சோகம்

ஐடிசியின் சோகம்

ஜிஎஸ்டி கவுன்சில் ஜூலை 17ஆம் தேதி சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவன பங்குகள் சுமார் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இந்த சரிவின் காரணமாக அன்றைய தின வர்த்தகத்தில் மட்டும் ஐடிசி நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான பங்கு மதிப்பை இழந்துள்ளது.

 

எல்ஜிசி

எல்ஜிசி

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி, ஐடிசி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து சுமார் 16.29 சதவீத பங்குகளை வைத்துள்ளது. உயிர் காக்கும் நிறுவனமே உயிர் கொல்லும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக இது அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.7,000 கோடி இழப்பு

ரூ.7,000 கோடி இழப்பு

இந்நிலையில், ஐடிசி நிறுவனத்தின் 12 சதவீத சரிவால் எல்ஐசி நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பீடு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் வரி

கூடுதல் வரி

5 சதவீத வரி ஜூலை1ஆம் தேதிக்கு முன் சிகரெட் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட விளம்பர மதிப்பான 5 சதவீத வரி, ஜிஎஸ்டி வரியமைப்பிலும் தொடரும் நிலையில், மேலும் பில்டர் இல்லாத சிகரெட் 65mmக்கு குறைவாக இருக்கும் 1000 சிகரெட் தயாரிப்புக்கு 2,076 ரூபாய் தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும்.

ஜிஎஸ்டிக்கு முன் இது 1,591 ரூபாயாக இருந்தது. அதேபோல் பில்டர் சிகரெட் 70mmக்கு குறைவாக இருக்கும் 1,000 சிகரெட்க்கு கூடுதலா 621 ரூபாய் விதித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.

 

அதிர்ச்சி ஆய்வு

அதிர்ச்சி ஆய்வு

இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு 2016ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியானது.

 

இந்திய பெண்கள்

இந்திய பெண்கள்

அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிகப் புகைப்பழக்கம் கொண்ட பெண்கள் நாடுகளில் பட்டியலில் அமெரிக்க முதல் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய பெண்கள் அடுத்தச் சில ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவிற்கு உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் ஆய்வுகள் கூறுகிறது.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் 2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டு அளவுகளைப் பார்க்கும் போது இதன் அளவு 10 பில்லியன் குறைவாகும். இதேகாலக்கட்டத்தில் சிகரெட் உற்பத்தி அளவுகளும் 117 பில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து 105.3 பில்லியனாகக் குறைந்துள்ளது.

பெண்கள்

பெண்கள்

இம்நிலையில் இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை கடந்த 32 வருடத்தில் 2 மடங்குக்கும் அதிமாக உயர்ந்துள்ளது என இந்த ஆய்வறிக்கை ஒரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.

2வது இடத்தில் இந்தியா

2வது இடத்தில் இந்தியா

2016ஆம் ஆண்டில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் வாழும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, பிரேசில், ஆகிய நாடுகள் உள்ளது.

2017இல் இதன் நிலையில் கண்டிப்பாக பெரிய அளவில் மாற்றம் இருக்கும்.

 

ராமதாஸ் காட்டம்..

ராமதாஸ் காட்டம்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+