தங்கம் காப்பீடு பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொத்து, ரொக்கப் பணம், விலை மதிப்பற்ற பொருட்கள் போன்றவற்றைத் திருட்டு, கொள்ளை, இயற்கை பேரழிவுகள் முதலியனவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்காகக் குறிப்பிடத்தக்க காப்பீடு திட்டங்கள் உள்ளன. வீடு, கார் போன்றவற்றுக்குக் காப்பீடு திட்டங்கள் பொதுவாகவே உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். தங்கத்தினை பாதுகாக்கவும் காப்பீடு திட்டங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

 

பல்வேறு வகையான ஆபத்துகளில் இருந்து சொத்துக்களை பாதுகாக்க சில பிரத்தியேக காப்பீடு திட்டங்கள் உள்ளன. வங்கி லாக்கர்களில் வைக்கும் விலை மதிப்பற்ற பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பு ஏற்பதில்லை. இதனால் தங்கத்தை வீட்டில் வைத்துக்கொண்டு காப்பீடு செய்வது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏன் தங்க நகையினை பாதுகாக்க வேண்டும்?

ஏன் தங்க நகையினை பாதுகாக்க வேண்டும்?

திருமணம், அல்லது ஏதேனும் முக்கியமான விழாக் காலங்களில் தங்கத்தினை வாங்கினாலும் அதனை வாங்குவதற்கான முக்கிய காரணம் நிதி பிரச்சனைகளில் இருக்கும் போது அதனை வைத்து எளிதாகக் கடன் பெற முடியும். தங்கம் காப்பீடு திட்டங்கள் உங்கள் தங்கத்தின் மீதான பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும். உங்கள் வீடு அல்லது வங்கி லாக்கரில் வைக்கும் போது ஏற்படும் இழப்பிற்கு இந்தக் காப்பீடு திட்டங்கள் உதவும்.

தங்கம் காப்பீடு

தங்கம் காப்பீடு

தங்கத்தின் மீது தனியாக அல்லது வீட்டின் மீது எடுக்கும் பாலிசி திட்டங்கள் என இரண்டு முறையில் காப்பீடு பாலிசிகளை தேர்வு செய்யலாம். காப்பீட்டு நிறுவனங்கள் விபத்து இழப்பு, கொள்ளை, திருட்டு, சேதம் அல்லது வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளின் இழப்பு ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.

காவல் நிலையத்தில் எதற்குப் புகார் அளிக்க வேண்டும்?
 

காவல் நிலையத்தில் எதற்குப் புகார் அளிக்க வேண்டும்?

சில காப்பீட்டு நிறுவனங்கள் நகைகளில் நீங்கள் அணிந்து இருக்கும் போது கொள்ளை அடிக்கப்பட்டால் அதற்குக் காப்பீடு தொகையினை வழங்குகின்றன. இதற்குக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எப்ஐஆர் நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையான தீர்வு தொகை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

முழுமையான தீர்வு தொகை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பல இந்திய தங்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த அளவில் மட்டுமே தீர்வு தொகையினை திருப்பி அளிக்கின்றனர். உங்களுக்கு முழுமையான தீர்வும் வேண்டும் என்றால் அதிகம் ப்ரீமியம் செலுத்தக் கூடிய சிறப்பு காப்பீடு திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

எப்போது காப்பீடு தொகை கிடைக்க வாய்ப்பில்லை

எப்போது காப்பீடு தொகை கிடைக்க வாய்ப்பில்லை

போர், கலவரம், தீவிரவாத செயல்களினால் ஏதேனும் பாதிப்புகள் நிகழும் போது காப்பீடு அளிக்கப்பட மாட்டாது. உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது பணிப்பெண் / பராமரிப்பாளர்களால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது.

அந்த 30 நாட்கல்

அந்த 30 நாட்கல்

மேலும் வீட்டில் திருட்டு நடந்து 30 நாட்களுக்குப் பிறகு காப்பீடு தொகையினை பெற முயலும் போதும் காப்பீட்டு நிறுவனங்கள் தீர்வு பணத்தினை அளிக்காது.

பிரீமியத்தினை தேர்வு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை

பிரீமியத்தினை தேர்வு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை

சில காப்பீட்டு நிறுவனங்கள் தங்கம் திருட்டுப் போகும் போது அல்லது சேதம் அடைந்த போது காப்பீடு தொகைக்கான கோரிக்கையினை வைக்கும் போது ரசீதுகளை கேட்கும், எனவே ரசீதுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மதிப்பைப் பொருத்து காப்பீடு

மதிப்பைப் பொருத்து காப்பீடு

சில நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பினை வைத்துத் தான் அளிக்கும். அந்த சமயங்களில் என்ன தான் நீங்கள் அதிக தொகைக்கு பிரீமியம் கொடுத்து பாலிசி வாங்கி இருந்தாலும் நீங்கள் வைத்திருந்தும் தங்கத்தின் மதிப்பினை வைத்துத் தான் காப்பீடு தொகை திருப்பி அளிக்கப்படும்.

அளவைப் பொருத்து காப்பீடு

அளவைப் பொருத்து காப்பீடு

தங்கக் காப்பீட்டில் உள்ள பிரீமியம் நீங்கள் காப்பீட்டாளரிடம் காப்பீடு செய்யும் தங்கத்தின் அளவைப் பொறுத்தது. காப்பீட்டு கொள்முதல், தங்க நகை மற்றும் நிபந்தனைகளின் நிலை ஆகியவற்றின் போது தங்கத்தின் பரவலான சந்தை மதிப்பு அடங்கும் மற்ற நிர்ணயிக்கும் காரணிகளை பொறுத்தது ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things to know before buy a gold insurance in Tamil

Things to know before buy a gold insurance in Tamil
Story first published: Wednesday, July 26, 2017, 9:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X