வால்மார்ட், மெட்ரோ உடன் இணையும் மளிகை கடைகள்.. தடம்புரண்டு நிற்கும் ரீடைல் சந்தை..!

கடந்த வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோது நாட்டின் ஒட்டுமொத்த ரீடைல் சந்தையும் ஆடிப்போனது, அதேபோல் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலியாகத் தற்போது ரீடைல் சந்தை முழுமையாகத் தடம்புரண்டு நிற்கிறது.

நம்ம ஊரில்களில் இருக்கும் அண்ணாச்சி கடைகள், செட்டியார் கடைகள் அனைத்தும் தற்போது வால்மார்ட், மெட்ரோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

ஜிஎஸ்டி பாதிப்பு

ஜிஎஸ்டி பாதிப்பு

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் வகைப்படுத்தாத மற்றும் பதிவு செய்யப்படாத மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் தற்போது வர்த்தகத்தை விட்டு வெளியேறவும், வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கார்பரேட் நிறுவனங்கள்

கார்பரேட் நிறுவனங்கள்

இதன் காரணமாகச் சந்தையில் இருக்கும் சிறு சிறு மளிகைக் கடைகள் அனைத்துத் தங்களுக்கான வர்த்தகத்தைத் தொடர்ந்து செய்யப் பொருட்களின் சேவைக்குப் பெரிய கடைகளிடம் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது.

குறிப்பாக வட இந்தியாவில் வால்மார்ட், மெட்ரோ போன்ற கார்பரேட் நிறுவனங்களின் இந்த மாதம் உறுப்பினராக இணைந்துள்ள கடைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

 

 தொடரும்...

தொடரும்...

பெரிய நிறுவனங்களில் உறுப்பினராக இணையும் தற்போதைய நிலை அடுத்தச் சில மாதங்களுக்குத் தொடரும் எனச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய நிறுவனங்களின் இணையும் சிறிய கடைக்காரர்கள் அனைவரும் தங்களுக்கான பொருட்கள் தேவையை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். மேலும் இவர்கள் அனைவருக்கும் வருடம் 20 லட்சம் விற்றுமுதல் இல்லாத காரணத்தால் எவ்விதமான பிரச்சனையுமில்லை.

 

வலிமை

வலிமை

இந்த முறையின் மூலம் சந்தையில் வர்த்தக முறை சற்று வலிமையாகும், மேலும் மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் வகைப்படுத்தப்பட்ட துறைக்குள் நுழைவார்கள் என ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வால்மார்ட்

வால்மார்ட்

கடந்த சில வாரங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையை நாங்கள் இதுவரை பெற்றதை விடவும் அதிகமானது என வால்மார்ட் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை தொடந்து அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது வால்மார்ட்.

 

2.6 சதவீத கடைகள்

2.6 சதவீத கடைகள்

நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் 2.6 சதவீத வியாபாரிகள் தற்போது வகைப்படுத்தப்படாத துறையில் வகைப்படுத்தப்பட்ட துறைக்கு மாறியுள்ளனர்.

பெரிய நிறுவனங்களின் கடைக்காரர்கள் மட்டும் அல்லாமல் தற்போது ஹோட்டல் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களும் இணைந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் மூலம் கிடைக்கும் வர்த்தகமும் கடைக்காரர்கள் தற்போது இழந்துள்ளனர்.

 

ஜூலை 1

ஜூலை 1

இந்த மாற்றங்கள் அனைத்தும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட ஜூலை 1ஆம் தேதிக்குப் பின் நிகழ்ந்தவை.

இந்தச் சூழ்நிலை மேலும் தொடர்ந்தால் நமம் ஊர் மளிகை கடைகளையும் பெரிய பெரிய கார்பரேட் ஆங்காடிகளின் கையில் தான் இருக்கும்.

 

வால்மார்ட்இன் அதிரடி திட்டம்

வால்மார்ட்இன் அதிரடி திட்டம்

நுகர்வோர் சந்தை இத்தகைய பாதிப்பை சந்தித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் தனது ஆதிக்கத்தை மேலும் வவிமையாக்க அமெரிக்கக் கார்பரேட் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

கடந்த 25 நாட்களில் (ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்) வால்மார்ட் நிறுவனத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் இத்திட்டம் சிறு குறு வியாபாரிகளின் வர்த்தகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சொல்லப்போனால் வால்மார்ட் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.

 

வால்மார்ட் திட்டம்..

வால்மார்ட் திட்டம்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+