சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 26 நாட்கள் முழுமையாக முடிந்த வர்த்தகச் சந்தையில் பல சந்தேகங்கள், குழப்பங்கள் வியாபாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.
சாமானிய மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்தப் பொருட்களுக்கு என்ன வரி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி பற்றிய குழப்பங்கள். நாட்டில் பல வணிக நிறுவனங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் அதிகப்படியான வரி எனப் பல மோசடி வேலைகளைச் செய்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் மக்களாகிய நீங்கள் சந்தித்த பிரச்சனைகள், இக்கட்டான சூழ்நிலைகள், ஜிஎஸ்டி குறித்து உங்களது கருத்து, சந்தைக்கு இது சாதகமாக, பாதகமான எனப் பலவற்றையும் விவாதிக்க மக்களாகிய நீங்கள் விவாதம் செய்யும் தளமாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் இருக்க வேண்டும் என விரும்புகிறது.
உங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைக் கமென்ட் பகுதியில் பகிரவும்..


Click it and Unblock the Notifications