கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தங்கம் இறக்குமதி இரண்டாவது காலாண்டில் பாதியாகக் குறைந்துள்ளது என்றும் இது ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததனால் ஏற்பட்ட விளைவும் என்றும் உலகத் தங்க கவுசில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
முதலீடுகள் முதல் திருமணப் பரிசு வரை இந்தியாவில் தங்கம் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றது. உலகளவில் தங்கத்தினை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
முக்கியக் காரணம்
முதல் காலாண்டினை விட வரி உயர்ந்து இருப்பது தான் தங்கம் மீதான இறக்குமதி குறைந்து இருப்பதற்கான கரணமாகப் பார்க்கப்படுகின்றது.
தங்கம் மீதான ஜிஎஸ்டி
தேசிய அளவில் ஒரே வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஏற்கனவே தங்க மீது இருந்த 1.2 சதவீதம் வரி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கத்தினை இறக்குமதி செய்யும் போது நகைக்கடை உரிமையாளர்கள் கிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற போதிலும் அந்தச் செல்வி கடைசியில் விடிவது என்னவோ வாடிக்கையாளர்கள் மீது ஆகும்.
தேவையும், இறக்குமதியும்
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 518.6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிதி ஆண்டில் 308.4 டன் ஆக இறக்குமதி குறைந்துள்ளது.
எப்போது தங்கம் இறக்குமதி அதிகமாக இருக்கும்?
இந்தியாவில் எப்போதும் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும் போது இரண்டாம் அரையாண்டில் தான் தீபாவளி, தசரா உள்ளிட்ட விழக்கால அதிகம் விற்பனை ஆகும்.
தேவைக் குறைந்துள்ளது
கடந்த சில வாரங்களாகத் தங்கம் இந்தியாவில் தங்கம் மீதான தேவை குறைந்து காணப்படுவதாகவும், அன்மையில் தங்கம் வாங்கியவர்கள் குறைந்த காலத்தில் மீண்டும் தங்கம் வாங்க விரும்புவது இல்லை என்றும் உலகத் தங்க கவுன்சில் கூறியுள்ளது.
அச்சம்
வரி உயர்வு இந்தியாவில் தங்கம் வாங்குபவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, தங்கத்தினைத் தங்களது சொத்தாக இந்தியர்கள் பாதுகாக்கின்றனர்.
சென்ற ஆண்டுடன் ஒப்பீடு
2016-ம் ஆண்டு 120 டன் தங்கம் கடத்தப்பட்டதாகவும் அதை விட அதிகமாக 2017-ம் ஆண்டுத் தங்கம் கடத்தல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இறக்குமதி வரி
ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளது. அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் போது செலுத்தப்பட வேண்டிய சுங்க வரியும் அதிகமாக உள்ளது. அதனால் கடத்தல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சுங்க வரி
தங்கம் மீதான தேவையினைக் குறைப்பதற்காக 2013-ம் ஆண்டு 10 சதவீதமாகச் சுங்க வரி உயர்த்தப்பட்டது.
முழு ஆண்டில் இறக்குமதி எப்படி இருக்கும் ஒரு ஒப்பீடு
2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 650 முதல் 750 டன் ஆக இருக்கும் என்றும் இது சென்ற ஆண்டை விடச் சற்றுக் குறைவு தான் என்றும் உலகத் தங்க கவுன்சில் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications