இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி வர்த்தகச் சந்தையைப் புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி இந்திய சந்தையில் அடுத்தச் சில மாதங்களில் தெரியும். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் வரியமைப்பிற்குள் வரும் என எதிர்பார்க்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து வெறும் 35 நாட்களே ஆன நிலையில், இதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அருண் ஜேட்லி
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இன்னும் சில காலத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் இருக்கும் 12% மற்றும் 18% வரிகள் இணைக்கப்படும்.
இதற்காகப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
35 நாட்கள்
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த 35 நாட்களில் நிதியமைச்சர் வரி மாற்றம் குறித்துப் பேசுகிறார் என்றால், சரியான திட்டமிடாமல் ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
கனடாவில் கூட ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னரே வரியைக் குறைத்தனர்.
இணைப்பு
ஜிஎஸ்டி கீழ் இருக்கும் 12% மற்றும் 18% வரிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். ஆதலால் இதற்கான பணிகளை இதுவரை துவங்கப்படவில்லை.
கருத்து
ஜிஎஸ்டி கீழ் பல அளவுகளில் வரி விதிப்பு இருக்கிறது எனச் சந்தையில் தொடர்ந்து கருத்து நிலவி வருகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் அதிகளவிலான மக்கள் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றை வரி விதிப்புகள் சாதாரணக் காரியமில்லை.
ஆட்டோமொபைல்
மேலும் அவர் சிறிய ரக ஹைப்ரிட் கார்களின் மீதான வரி ஜிஎஸ்டி கீழ் குறைக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதன் விலையை உயர்ந்துள்ளது. இது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர்
வியாழக்கிழமை சென்டரஸ் கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் 2017 மற்றும் இண்டகிரேடெட் கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் 2017 ஆகியவற்றைத் தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 4 படிகளில் விதிக்கப்படுகிறது. அவை 5%, 12%, 18%, 28%, இதனுடன் ஆரம்பர வரி மற்றும் பாவ வரி ஆகியவற்றும் தற்போது நடைமுறையில் உள்ளது.
பல பொருட்கள் 0% அதாவது வரியில்லா பொருட்களாகவும் உள்ளது.
இந்தியா
சொந்தமாக பிஸ்னஸ்
ரயில் டிக்கெட்
ரியல் எஸ்டேட்
ஜிஎஸ்டியும்.. விவசாயமும்..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications