அமெரிக்காவைச் சேர்ந்த ஐடி நிறுவனமான காக்னிசென்ட் ஜூண் மாத காலாண்டில் 4,400 ஊழியர்களை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.
இந்த ஊழியர்கள் வெளியேற்றம் செயல்திறன் அடிப்படையிலும், விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழும் அளிக்கப்படும் என்று நிறுவன தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
கானிசென்ட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டு கணக்கின் படி அதிகபட்சமாக இந்தியாவில் தான் 2,56,800 ஊழியர்கள் உள்ளனர். இதுவே மார்ச் 2017-ன் போது 2,61,200 ஊழியர்கள் இருந்துள்ளனர்.
ஊழியர்கள் பணி நீக்கம்
சாதாரனமாக நாங்கள் ஊழியர்களைச் செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டங்களின் மூலம் குறைக்க எண்ணியதை விட அதிக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று காக்னிசண்ட் நிறுவனத்தின் சிஎஃப்ஓ கரென் மெக்லோவ்லின் கூறியுள்ளார்.
விருப்ப ஓய்வு
விருப்ப ஓய்வு பெரும்பாலும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகின்றது, மேலும் இவர்களுக்கு 9 மாத சம்பளமும் அளிக்கப்படும் என்று மே மாதம் அறிவிக்கப்பட்டது..
வருடாந்திர தோய்வு விகிதம்
காக்னிசென்ட் நிறுவனத்தில் வருடாந்திர தோய்வு விகிதம் 23.6 சதவீதமாக உள்ளது, பிபிஓ, மற்றும் பயிற்சி ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதானால் இந்த நிலை என்று ஜூன் காலாண்டு விவரங்கள் கூறுகின்றது.
தொய்வு நிலை, ஊழியர்கள் பணியமர்த்தல், திறன்
வரும் மாதங்களில் தொய்வு நிலையினைக் குறையும் என்றும் ஊழியர்களின் எண்ணிக்கையினைக் கவனமாகக் கையாண்டு வருகின்றோம், டிஜிட்டல் வணிகத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத் திறன் தேவை எனும் போது ஊழியர்களைப் பணிக்கும் எடுக்கும் எண்ணத்திலும் முதலீடு செய்யவும் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications