சொந்த வீடு வாங்குவது போல் இன்றைய தலைமுறையினர் மத்தியில் கார் வாங்க வேண்டும் என்பதும் மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களின் மீதான வட்டி குறைவாக விதிக்கப்பட்டது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பாக இருந்தது.
ஆனால் தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களின் மீது கூடுதல் வரியை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களின் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள ஆடம்பர செஸ் வரி 15 சதவீதமாக இருக்கும் நிலையில், இதனை 25 சதவீதமாக உயர்த்த வேண்டுமென முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
செஸ் வரி
ஆடம்பர செஸ் வரி உயர்வுக்கான அறிவிப்பு வெளியான உடனேயே எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களின் விலை உயராது. செஸ் வரி உயர்விற்கான ஜிஎஸ்டி இழப்பீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
திருத்தம் செய்வதற்கான ஒப்புதல்களை ஜிஎஸ்டி கவுன்சில் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கார்கள் மீதான ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வரி விதிப்பில் கார்கள் அனைத்தும் 28 சதவீத வரி விதிப்பின் கீழ் உள்ளது.
கார்கள் மீது விதிக்கப்பட்டும் 17 மத்திய மற்றும் மாநில வரி மற்றும் 23 செஸ் வரி ஆகியவற்றை முழுமையாக நீக்கப்பட்டு ஜிஎஸ்டி வரியில் ஒற்றை வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
செஸ் வரி வித்தியாசம்
4 மீட்டர் நீளம் மற்றும் 1,200சிசி என்ஜின் சக்திக்குக் குறைவாக இருக்கும் சிறிய ரகக் கார்கள் மீது 1 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படுகிறது.
1,500 சிசி திறன் கொண்ட டீசல் என்ஜின் கார் மீது 3 சதவீத செஸ் வபி விதிக்கப்படுகிறது.
மேலும் நடுத்தர மற்றும் எஸ்யூவி கார்கள் மீது 15 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இந்த 15% செஸ் வரியையே 25 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ஜூலை 1
சிறிய ரகக் கார்கள் மீதான வரி ஜிஎஸ்டி கீழ் அதிகளவில் குறைந்த நிலையில், பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதன் விலையை அதிகளவில் குறைந்தது. ஆனால் சில நிறுவனங்கள் மட்டும் அதன் முந்தைய அளவிலான விலையிலேயே விற்பனை செய்து வருகிறது.
இந்தச் செஸ் வரி மாற்றத்தின் மூலம் அனைத்து நிறுவனங்களும் புதிய விலை பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனே வாங்கிடுங்க..
இதனால் எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களை வாங்கத் திட்டமிடுவோர் உடனே கார் புக் செய்யுங்கள், இல்லையெனில் வரியாகக் கூடுதல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். ஆகவே முறையாகத் திட்டமிட்டு குறைவான பணத்தை உங்களது கனவு காரை விரைவாக வாங்கிடுங்கள்.
ரூ. 40,000 வரை சலுகை..!
டிவிஎஸ்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications