ஜிஎஸ்டி வரியில் மீண்டும் மாற்றம்.. வீட்டு உபயோக பொருட்களுக்கு மீது கவனம் செலுத்தும் அரசு..!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் பல பொருட்கள் மீதான வரி மாற்றி வருகிறது வருமான வரித்துறை. இப்படி மாற்றி அமைக்கும் பட்டியலில் விரைவில் தோசை மாவு, கஸ்டர்ட், கேஸ் லைட்டர் உள்ளிட்ட பொருட்களும் விரைவில் இணைய இருக்கின்றது.

கார் மீதான செஸ் வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்வு, ஜவுளி பொருட்கள் மீதான 18 சதவீத வரி 5 சதவீதமாகக் குறைப்பு போன்ற மாற்றங்கள் ஜிஎஸ்டி வரியில் தினமும் மாற்றம் அடைந்து வருவது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது. இப்படிப்பட்ட முறையாகத் திட்டமிடப்படாத ஜிஎஸ்டி வரி முறையினை ஏன் அமல்படுத்தியுள்ளது என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் தோசை மாவு, கேஸ் லைட்டர் போன்ற பொருட்கள் மீதான வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது. அந்தப் பட்டியலினை நான் இங்குப் பார்ப்போம்.

ரண்டு டஜன் பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்பு

ரண்டு டஜன் பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்பு

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் இட்லி, தோசை மாவு, சமையல் அறை கேஸ் லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினை மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் குறைக்க முடிவு செய்துள்ளது. இது போன்று இரண்டு டஜன் பொருட்கள் மீதான வரியினை ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன

பிராண்டட்

பிராண்டட்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கனவே பிரண்டட் மற்றும் டிரேடு மர்க் பெற்ற உணவு பொருட்கள் மீது 5 சதவீத வரியையும், பிராண்டட் இல்லாத உணவு பொருட்கள் மீது வரி இல்லை என்றும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல டிரேடு மார்க் பெற்ற உணவு நிறுவனங்கள் தங்களது டிரேடு மார்க்கை திரும்பப் பெற கோரிக்கை வைத்துள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்றது, அதில் சில பொருட்கள் மீதான வரியைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிவிப்பு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தினை அடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது.

உலர்ந்த புளி

உலர்ந்த புளி

உலர்ந்த புளியின் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும், இதே போன்று வறுக்கப்பட்ட பருப்பு வகைகள் மீதான வரி விகிதமும் குறைக்கப்படும்.

 கஸ்டர்டு பவுடர்

கஸ்டர்டு பவுடர்

பால் மற்றும் முட்டைக் கலவையான கஸ்டர்டு பவுடரின் மீதான ஜிஎஸ்டி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும்.

தோசை மாவு

தோசை மாவு

பேக் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவு மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்படும்.

புண்ணாக்கு

புண்ணாக்கு

விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படும் எண்ணெய் கேக் எனப்படும் புண்ணாக்கு உள்ளிட்ட பொருட்கள் மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படும். தற்போது இதன் மீது வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பூஜை சாமானங்கள்

பூஜை சாமானங்கள்

ஊதுவத்தி, கர்ப்பூரம் போன்ற பொருட்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பிற முக்கியப் பொருட்கள்

பிற முக்கியப் பொருட்கள்

பிளாஸ்டிக் ரெயின்கோஸ்ட், ரப்பர் பட்டைகள், நெல் அரிசி ரப்பர் ரோல்ஸ், கணினி மானிட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு லட்டர் ஆகியவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும்.

துடைப்பங்கள் மற்றும் பிரஷ்கள்

துடைப்பங்கள் மற்றும் பிரஷ்கள்

துடைப்பங்கள் மற்றும் பிரஷ்கள் மீது உள்ள 5 சதவீத வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஜெபமாலை மற்றும் பிரார்த்தனை மணிகள் மீது தற்போது உள்ள 18 சதவீத வரி குறைக்கப்பட்டு 5 சதவீதமாக அறிவிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+