நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் எஸ்பிஐ, 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 6,622 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கம் அனைத்தையும் விஆர்எஸ், மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை எனக் கணக்குக்காட்டியுள்ளது எஸ்பிஐ.
இந்திய வங்கிகள் அதிகளவிலான டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த துவங்கியுள்ள நிவையில், தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.
புதிதாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜூன் காலாண்டின் முடிவில் எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2.80 லட்சத்தில் இருந்து 2.73 லட்சமாகக் குறைந்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதன் மூலம் இவ்வங்கியில் புதிதாக 10,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி
மேலும் ஊழியர்கள் வெளியேற்றம் குறித்து எஸ்பிஐ வங்கியின் நிர்வாகத் தலைவர் ராஜ்னிஷ் குமார் கூறுகையில், அடுத்தச் சில வருடத்தில் வங்கித் துறையில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும். எஸ்பிஐ வங்கியில் மட்டும் அடுத்த 2 வருடத்தில் 10 சதவீத வேலைவாய்ப்புகள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.
மொத்த கணக்கு
ஜூன் காலாண்டில் மட்டும் மொத்தம் 7,247 ஊழியர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். இதில் 3,569 ஊழியர்கள் அதன் கிளை வங்கிகளில் பணியாற்றியவர்கள்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குச் சுமார் விஆர்ஸ் தொகையாகச் சுமார் 473 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 7,247 ஊழியர்கள் பணியில் இருந்து விலகியதன் மூலம் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் வருடத்திற்குச் சுமார் 400 கோடி ரூபாய் சேமிக்க முடியும்.
விற்பனை
வங்கிகள் இணைப்பிற்குப் பின் எஸ்பிஐ வங்கியின் 30 சதவீத அதிகாரிகள் தற்போது விற்பனை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏதுவாக, ஊழியரின் விற்பனை அளவைப் பொருத்து ஊக்கத்தொகை அளிக்கப்படும் வகையில் புதிய முறையை எஸ்பிஐ நிர்வாகம் வடிவமைத்துள்ளது.
சேமிப்பு
மேலும் கிளை வங்கிகளை எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்ட பின்பு அதன் கிளை மற்றும் வர்த்தக அலுவலகங்களை நிர்வாகத்திற்கு ஏதுவாக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் வருடத்திற்கு 1,160 கோடி ரூபாய்ச் சேமிக்கிறது எஸ்பிஐ.
ஆட்டோமேஷன்
கிளை வங்கிகள் இணைப்பிற்குப் பின் எஸ்பிஐ வங்கியில் அதிகளவிலான டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கியப் பணிகள் அனைத்தும் தற்போது ஆட்டோமேஷன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் ஐடி, விவசாயம் துறைக்கு அடுத்ததாக ஆட்டோமேஷன் பாதிப்பு வங்கித்துறையிலும் துவங்கியுள்ளது.
பணிநீக்கம்
வங்கித்துறையில் வேலைவாய்ப்பு மிகவும் பாதுகாப்பானது என்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்கள் அனைவரும் வங்கித்துறையை நோக்கிய பயணம் செய்யத் துவங்கியுள்ள இன்றைய நிலையில், வங்கிகள் ஆட்டோமேஷன் காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
தனியார் வங்கிகள்
பொதுத்துறை வங்கியை விடவும் தனியார் வங்கிகளில் தான் அதிகளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகளில் பணிநீக்கத்தின் அளவு சற்று அதிகமாகவே உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதன்முதலாகத் துவங்கியது எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தான். இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி தற்போது எஸ்பிஐ வங்கி வரை வந்துள்ளது.
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்
சூப்பரான வழி
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications