இந்தியாவில் மொத்த மாநிலங்களின் வருவாய் 2016 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017 நிதி ஆண்டில் 16.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் கூறுகின்றது. இதனால் இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க துவங்கியுள்ளன.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 9,500 வரை நட்டம் அடைந்துள்ளதாக 11 மாநிலங்கள் மத்திய அரசிடம் தனித்தனியாகக் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் இந்தத் தொகையினை இழப்பீடாக அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாநிலங்கள்
மிகப் பெரிய மாநிலங்களான ஆந்திரா, சட்டிஷ்கர், குஜராத், ஹிமாச்சல், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் 5,600 கோடி வருவாய் இழப்பு நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சிறிய மாநிலங்கள்
பின்னர்ச் சிறிய மாநிலங்களான கோவா, ஜம்மு காஷ்மிர் மற்றும் ஜார்கண்டு போன்ற மாநிலங்கள் 3,900 கோடி இழப்பீடு வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
வருவாய் இழப்பு
ஒவ்வொரு மாநிலங்களுக்கு 15.5 சதவீதம் வருவாய் இழப்பு நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதனால் தற்போது வரை 5,600 கோடி வரை இழப்பு கேட்டுள்ள மாநிலங்களுக்கு 2018 நிதி ஆண்டு முடிவில் 9,500 கோடி வரை இழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மதிப்புக்கூட்டு வரி
எப்படி மதிப்புக்கூட்டு வரியான வாட் வரி அறிமுகம் செய்யப்பட்ட போது ஏப்ரல் 2005- முதல் ஜனவரி 2008-ம் ஆண்டு வரை சிக்கல்கள் இருந்தனவோ அதேப்போன்று ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினாலும் வருவாய் இழப்புகள் போன்றவை இருக்கும்.
சேவை வரி மீதான 10 சதவீத உள்ளீட்டு வரி மூலம் 5 சதவீத செயல்திறன் லாபத்தை நாம் இணைத்தால் 5 தமிழ்நாடு, சட்டிஷ்கர், குஜராத், ஓடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் 3,700 கோடி ரூபாயினை 2018 நிதி ஆண்டில் இழப்பீடாக மத்திய அரசு அளிக்க வேண்டி வரும்.
ஜிஎஸ்டி-ல் உள்ள வரிகள்
ஜிஎஸ்டி-ல் வாட், மத்திய விற்பனை வரி, சொகுசு வரி, ஆடம்பர வரி, நுழைவு வரி (அனைத்து வடிவங்கள்), பொழுதுபோக்கு வரி, விளம்பர வரி, லாட்டரி வரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் மீதான வரி, மாநில சீசஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள், சேவை வரி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி-ல் இணைக்கப்படாத வரிகள்
எனினும் வருமானம், சொத்து மற்றும் மூலதன பரிமாற்றங்கள், பெட்ரோலியம் பொருட்கள், மாநில சுங்கவரி மற்றும் மின்சாரக் கடமை மீதான வரிகள் ஜிஎஸ்டி-ல் இணைக்கப்படவில்லை. இதனை எப்போதும் போல மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம்.
மாநில அரசின் வரி வருவாய்
மாநில அளவில் மொத்த வரி வருவாயில் 55 சதவீதமாக ஜிஎஸ்டி கணக்கில் மாநில வரி விதிக்கப்பட்டு, வரி வருவாயில் 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி வரியைப் பொருத்த வரையில் 55 சதவீதம் மாநில அரசுகள் பெற்று வந்த வரி சென்றுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications