இந்திய கடற்படையை வலிமையாக்க மத்திய அரசு மேக் இன் இந்தியா கீழ் அடுத்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 234 விமானங்கள் தயாரிக்கப்போகிறது அரசு இத்திட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் 32,000 கோடி ரூபாய்.
இப்புதிய திட்டத்திற்காக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
234 விமானங்கள்
மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள படி 123 நேவெல் மல்டி-கோர் ஹெலிக்காப்டர்கள், 111 ஆயுதம் தாங்கிய யூடிலிட்டி சாப்பர்களைத் தயாரித்து இதனை இந்திய எல்லையில் நிறுத்து வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இவை அனைத்தும் போர் கப்பல்களில் நிறுத்திப் பயன்படுத்த கூடியவையாக உள்ளது.
மொத்த மதிப்பு
இந்த 234 ஹெலிக்காப்டர்களின் தயாரிக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பு 5 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 32,070 கோடி ரூபாய்.
கூட்டணி
இந்திய கடற்படைக்குத் தற்போது தேவையாக இருக்கும் இந்த 234 ஹெலிக்காப்டர்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசு. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் "strategic partnership" பாலிசி மூலமாகக் கூட்டணி நிறுவனங்கள் முறையில் தயாரிக்க உள்ளது அரசு.
வெளிநாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் ஆயுத உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்ட மத்திய அரசு மேக் இன் இந்தியா மற்றும் எஸ்பி பாலிசி வாயிலாக வெளிநாட்டு நிறுவனங்களையும் அவர்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர பல சலுகைகளை வழங்குகிறது அரசு.
இது வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
70,000 கோடி ரூபாய் திட்டம்
இதற்கு முன்னர் மத்திய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 6 அதிநவீன ஆயுதங்களை ஏந்தியிருக்கும் நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications