உலகச் சந்தையில் நுழையும் முயற்சியில் ‘பீரா 91’.. கோடி கணக்கில் கொட்டும் முதலீடுகள்..!

சேக்யூயா கேப்பிட்டல் இந்தியா அட்வைசர்ஸ் நிறுவனம் மூலம் 8 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளதாகப் பீரா 91 என்ற பெயரில் பீர் விற்பனை செய்யும் பி9 பீவரேஜஸ் பிரைவேட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரம் பி9 வீவரேஜஸ் நிறுவனம் 30 மில்லியன் டாலர்கள் வரை நிதியைத் திரட்ட சேக்யூயா கேப்பிட்டல் இந்தியா அட்வைசர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளது.

முக்கியமான 5 நாடுகள்

முக்கியமான 5 நாடுகள்

தற்போது பெற்றுள்ள முதலீடுகளை வைத்து பீ9 பீவரேஜஸ் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் கோடைக்காலம் முதல் வணிகம் துவங்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

ஏற்கனவே பீ9 பீவரஜேஸ் நிறுவனத்தின் பீரா 91 ரகப் பீர் அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பீரா 91 விற்பனை

பீரா 91 விற்பனை

ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த அன்கூர் ஜெய்ன் வரும் கோடைக்காலத்திற்குள் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெறும் அளவில் அதிகரிக்க விரும்புவதாகவும், ஒரு வருடத்தில் 12 மில்லியன் கேஸ் விற்பனை செய்வதை இலக்காக வைத்துள்ளதாகவும், தற்போது ஆண்டுக்குச் சராசரியாக 3 மில்லியன் கேஸ் வரை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆலைகள்

ஆலைகள்

பி9 பீவரேஜஸ் நிறுவனம் தற்போது இந்தூர் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் தங்களது ஆலையை வைத்துள்ளனர். இங்கு மட்டும் ஆண்டுக்கு 4.2 மில்லியன் கேஸ் வரை பீர் தயாரிப்பில் இவர்களால் ஈடுபட முடியும்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி

அமெரிக்காவிற்கு இறக்குமதி

அமெரிக்காவில் விற்பனை செய்யப் பி9 பீவரேஜஸ் பீர் ரகத்தினைப் பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்து வருவதாகவும், விரைவில் அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவேற்பு

வரவேற்பு

அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்துப் பிற நாடுகளில் தங்களது விற்பனையினை விரிவு படுத்த முடிவு செய்துள்ளதாகவும் ஜெயின் கூறியுள்ளார்.

துவக்கம்

துவக்கம்

பிரா 91 முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. பினார் 2016-ம் ஆண்டுச் சேக்யூயா நிறுவனத்தின் மூலம் முதலீடுகளைப் பெற்றுள்ளது. பின்னர் மீண்டும் ஜனவரி 2016-ம் ஆண்டு 7.5 மில்லியன் டாலரும் முதலீடாகப் பெற்றுள்ளது.

 பங்குகள்

பங்குகள்

தற்போது வரை பி9 பீவரேஜஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகள் முதலீட்டாளர்களிடம் உள்ளது. மீதம் நிறுவனர் மற்றும் அதன் நிர்வாக அதிகாரிகளிடம் உள்ளது. பி9 பொருத்த வரையில் சேக்யூயா மற்றும் ஜெய்ன் இருவரும் தான் மிகப் பெரிய பங்குதாரர்கள் ஆவர்.

 முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஜெனரல் அட்லாண்டிக் நிர்வாக இயக்குனர் சாந்தனு ரஸ்தோகி மற்றும் அதன் மூத்த துணைத் தலைவர் அலோக் மிஸ்ரா மற்றும் நாய்க் குடும்ப அறக்கட்டளை 2013 போன்றவர்கள் மூலம் பி9 பீவரேஜஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

நிதி திரட்ட ஆரம்பக் காலத்தில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் குணால் பால் மற்றும் ரோஹித் பன்சால், தனியார் சமபங்கு நிறுவனம் கிரைசிகிட்டல் இணை நிறுவனர் ஆஷிஷ் தவான்; மந்திரி சிங்கால், RNT மூலதன ஆலோசகர்களுடன் முதலீட்டாளராக உள்ளார்; மற்றும் உணவகம் கண்டுபிடிப்புத் தளம் ஜோமேட்டோ நிறுவனர் தீபிப் கோயல் உள்ளிட்டோரும் முதலீடு செய்துள்ளனர்.

நண்பர்கள்

நண்பர்கள்

பிரா 91 ரகப் பீர் நிறுவனத்தினைத் துவங்க முடிவு செய்தபோது ஜெயின் தனது நண்பர்கள் மூலம் 1.5 மில்லியன் டாலர் தொகையினை முதலீடாகப் பெற்றுள்ளார்.

உயர்தரமான பீர் தயாரிப்பில் இந்தியா

உயர்தரமான பீர் தயாரிப்பில் இந்தியா

உயர்தரமான பீர் தயாரிப்பை பயன்படுத்துவதில் இந்தியா 20 சதவீத வளர்ச்சியை மட்டுமே பிடித்துள்ளது. பீரா போன்று இந்தியாவில் 80 சிறிய பீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் வைட் ரைனோ, ஆர்பர் பிரீரிங் கோ, ஐரிஷ் வில்லேஜ், டூல்லிலி ப்ரூமிங் கோ, எஃபிங்கிட் பிரவெர்ஸ்க், டி.ஜே.ஸ் ப்ரூ வொர்க்ஸ், மும்பை சார்ந்த கேட்வே ப்ரூமிங் கோ, தி பர்கிங் டீர், தி ஒயிட் ஆவ்ல் பிரைவேட் மற்றும் பிரீவ்பாட் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஆகும்.

இந்திய பீர் சந்தை

இந்திய பீர் சந்தை

இந்தியாவில் பீர் விற்பனை 2010 முதல் 2015 வரை கணக்கிட்டு பார்த்தார் 6.2 பில்லியன் டாலர் சந்தையினை வைத்துள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் எரோமோனியோடர் இன்டர்நேஷனலின் ஆய்வு கூறுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+