பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..!

நகை கடைகளில் இருந்து தங்க வாங்கும் போது செய்யும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் பான் கார்டு எண் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு முடிவு செய்துள்ளது.

இதனால் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்துத் தங்கம் வாங்கும் போது தான் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை மாறி பான் கார்டு இல்லாமல் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக உள்ளது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 50,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து தங்கம் வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு நகை கடைகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்கம் வங்கினாலே பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

ஒருபக்கம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகாமாகத் தங்கம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனியாக வருமான வரித்துறைக்குச் நகை கடைக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கள்ளத்தனமான பரிமாற்றங்கள்

கள்ளத்தனமான பரிமாற்றங்கள்

கள்ளத்தனமாக்க தங்கப் பரிமாற்றங்கள் நடப்பதினை குறைப்பதற்காக நிதி ஆலோசகர் குழு தங்கம் வாங்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குப் பான் எண் காட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.

கடினம்

கடினம்

மக்கள் தங்களது சொத்தாக எந்த அளவு தங்கம் வைத்துள்ளார்கள் என்பதைச் சந்தையில் அறிவது கடினம் என்று நிதி சிக்கல்கள் ஆலோசகர் குழு குறிப்பிட்டுள்ளது. தங்கம் வாங்கும் போது வருமான வரித் துறையின் தரவை வைத்து வரி விலக்கை அளிக்க வேண்டும் என்றும் வரித் தவிர்ப்பை கடுமையான விதிகளின் மூலம் பின்பற்ற வேண்டும் என்றும் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கண்காணிக்கும் குழு

கண்காணிக்கும் குழு

கடந்த ஆண்டு நிதி நிலைப்புத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் வீடுகளில் உள்ள நிதிகள் குறித்த பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டது.

 தலைமை

தலைமை

அனைத்து நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களான ஆர்பிஐ, செபி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்றவற்றை நிர்வகிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி, நிதி பொருளாதாரத்தின் பேராசிரியரான தருண் ராமதுரை தலைமையிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம்

இந்தியாவில் தங்கம்

பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வீட்டின் பயன்பாட்டிற்காகத் தங்கம் வைத்திருப்பது அதிகம், இந்தச் சொத்துக்களில் குறிப்பிட்ட அளவை வெளியில் கொண்டு வந்து பிற முதலீட்டுத் திட்டங்களில் வைக்கும் போது நல்ல லாபம் அளிக்கும்.

காரணங்கள்

காரணங்கள்

வீட்டில் அதிகப்படியான தங்கத்தினை வைத்துக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வரி ஏய்ப்புச் செய்வதற்கு அல்லது தேவைப்படும் போது கடன் பெற மற்றும் விற்று நிதி சிக்கல்களைத் தவிர்க ஆகும்.

 தங்கம் பத்திர முதலீடு

தங்கம் பத்திர முதலீடு

தற்போது இந்தக் குழு பல விதமான தங்கப் பத்திர முதலீடு திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. இத் திட்டங்களில் தங்களைச் சார்ந்தவர்களை நாமினிகளாகவும் நியமிக்க முடியும்.

 பத்திர திட்டங்களால் நன்மை

பத்திர திட்டங்களால் நன்மை

மேலும் இந்தக் குழு ஆர்பிஐ உதவியுடன் பல புதிய சவரன் தங்கப் பத்திரம் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் மூலம் கையில் தங்கம் வைத்துள்ளது குறைக்கப்பட்டுப் பத்திரங்களாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தேவைப்படும் போது வட்டியுடன் பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+