மத்திய அமைச்சகம் ஜிஎஸ்டி ஆட்சி முறையின் கீழ் மத்திய அளவு, பெரிய மற்றும் எஸ்யூவி ரகக் கார்கள் மீதான செஸ் வரியை உயர்த்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான திட்டம் மத்திய அமைச்சகத்திற்குச் சமர்ப்பிக்கும் முன்பு இந்த ரகக் கார்கள் மீது 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. புதன்கிழமை நடைபெற்ற அமைச்சக கூட்டத்தில் செஸ் வரி உயர்வு மீதான கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி
ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மத்திய அளவு, பெரிய மற்றும் எஸ்யூவி ரகக் கார்களில் விலை மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனைத் தவிர்க இந்தச் செஸ் வரி உயர்வு வந்துள்ளது.
சட்ட திருத்தம்
ஆனால் செஸ் வரியை உயர்த்த 2017 ஜிஎஸ்டி சட்டத்தின் படி பிரிவு 8-ன் கீழ் திருத்தம் தேவைப்படுகின்றது.
ஜிஎஸ்டிக்கு முன்பு
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் வாகனங்கள் மீது 52 முதல் 54.72 சதவீதம் வரை வரி இருந்தது. மேலும் இதில் கூடுதலாக 2.5 சதவீதம் வரை மத்திய விற்பனை வரி, ஆக்டிராய் போன்றவை இருந்தன.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மொத்தமாக மோட்டார் வாகங்கள் மீதான வரி 43 சதவீதமாகக் குறைந்தது. எனவே 15 சதவீதமாக இருக்கும் செஸ் வரியை 25 சதவீதமாக உயர்த்தினால் ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி வருவாயினைப் பெறலாம்.
செஸ் வரி குறைவால் எவ்வளவு விலை குறைவு
தற்போது உள்ள ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் எஸ்யூவி கார்கள் வாங்குபவர்களுக்கு 1.1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இதுவே செஸ் உயர்த்தப்பட்டால் பழைய விலைக்கு வரும்.
எந்தப் பொருட்களுக்கு எல்லாம் செஸ் வரி
ஜிஎஸ்டி-ன் கீழ் ஆடம்பர பொருட்கள், கார், புகை இலை பொருட்கள், நில கறி போன்றவற்றுக்குச் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.
செஸ் வரி எதற்காக
செஸ் வரி மூலம் வரும் வரி வருவாயினை, மத்திய அரசு ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கும்.
விரைவில் அறிவிப்பு
தற்போது செஸ் வரி விதிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் விரைவில் கூட இருக்கும் அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எவ்வளவு வரி விகிதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications