சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ன் கீழ் 20 லட்சம் வரி செலுத்துனர்களுக்கு உதவி செய்வதற்காக மத்திய அரசு தாமதமாக வரி செலுத்தும் போது இருந்து வந்த தினம் 200 அபராதத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம் இனி வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் தாமதமாக செலுத்தப்படும் வரி தொகையின் மீது வட்டி விதிக்கப்பட உள்ளதாக ஜிஎஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி ஆகஸ்ட் 25 என்பது குறிப்பிடத்தக்கது.
விலக்கு
ஜூலை மாதம் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎர்ஸ்டிஆர் 3 படிவத்தினை யாரெல்லாம் தாக்கல் செய்யவில்லையோ அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத வரிக்கு வட்டி
ஜூலை மாதத்திற்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய வரி தொகையின் மீது தாமதமாகச் செலுத்தும் போது இருந்த வந்த வட்டியினைச் செலுத்த வேண்டும். அதனால் ஜூலை மாத வரிப் பணத்தினைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் இல்லாமல் அந்தத் தொகைக்கான வட்டியைச் செலுத்த வேண்டும்.
வட்டி எவ்வளவு?
ஜிஎஸ்டி வரியினைத் தாமதமாக வரி செலுத்தும் 18 சதவீதம் வட்டியாகச் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி பயனர்கள் எண்ணிக்கை
ஜிஎஸ்டி-ன் கீழ் மொத்தம் 60 லட்சம் நபர்கள் தங்களது வணிகங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் 40 லட்சம் நபர்கள் மட்டும் தான் ஜூலை மாதத்திற்கான வரியினைச் செலுத்தியுள்ளனர். மீதம் இருந்த 20 லட்சம் நபர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம்.
ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தினைத் தவறாகத் தாக்கல் செய்து இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தினை யாரெல்லாம் தவறாகத் தாக்கல் செய்துள்ளார்களோ அதனை ஜிஎஸ்டிஆர் 1 -2- 3 படிவத்தினைத் தாக்கல் செய்யும் போது சரி செய்துகொள்ளலாம் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரிதாக்கல் செய்யக் கடைசி நாள்
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தினை அனைவரும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் 3 படிவத்தினைச் செப்டம்பர் 10 மற்றும் 15-ம் தேதிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தப் படிவம் எதற்கு?
ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தின் நிறுவனத்தின் விற்பனை விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர் 2 படிவத்தில் கொள்முதல் செய்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர் 3 படிவத்தில் விற்பனை மற்றும் கொள்முதல் இரண்டையும் சேர்த்துப் பதிவு தாக்கல் செய்ய வேண்டும்.
ஏன் இந்த விலக்கு?
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக வரி தாக்கல் செய்யும் போது உள்ள குழப்பங்கள் உள்ளதால் தான் மத்திய அரசு இந்த விலக்கை அளித்துள்ளது. எப்போதுமே வரியினைத் தாமதமாகச் செலுத்தும் போது அபராதம் வசூலிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளித்துள்ளதினால் குருநாதா இது என்ன புதுக் கதையாக உள்ளதே என்று வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பு
இந்த வரி விலக்குத் தாமதமாக ஜிஎஸ்டி பதிவு செய்து நிறுவனங்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications