மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கார்கள் மீதான வரி அதிகரிப்பை வெளியிட்டது.
இதன் பின் மிட்-சைஸ் கார், பெரிய கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி கார்கள் மீதான வரியை அதிகரித்துள்ளது.
செஸ் வரி
தற்போது உயர்த்தப்பட்டுள்ள வரி அனைத்தும் செஸ் வரி மட்டுமே ஆகவே மிட்-சைஸ் கார்கள் மீது 2 சதவீத வரி, பெரிய கார்கள் மீது 5 சதவீத வரி, ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி கார்கள் மீது 7 சதவீத வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
50 சதவீத வரி
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் அனைத்து கார்கள் மீதும் 10 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது செய்யப்பட்டுள்ள வரி மாற்றத்தின் மூலம் அனைத்து கார்கள் மீதான வரியும் 50 சதவீத அளவில் மட்டுமே இருக்கும் வகையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
வரி வதிப்புகள்
இதன் மூலம், இனி சந்தையில் மிட் சைல் கார்கள் மீதான வரி 45 சதவீதமும், பெரிய கார்கள் மீதான வரி 48 சதவீதமும், எஸ்யூவி கார்கள் மீதான வரி 50 சதவீதமும் நடைமுறைக்கு வருகிறது.
எஸ்யூவி கார்கள் மீது முன்பு 43 சதவீத வரியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர சமுகம்..
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் நடுத்தர கார்கள் மீதான வரி அதிகளவில் இருந்த காரணத்தால், நடுத்தர சமுகம் அதிகளவில் பாதிக்கப்படும் என்ற கருத்து வலுத்த நிலையில். சமானியர்களுக்கும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் அதிகளவில் பயனளிக்கும் வகையில் தற்போது கார்கள் மீதான வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றமில்லை..
அதேபோல் ஹைபிரிட் வாகனங்கள்,13 சீட்டுகள் கொண்ட வாகனம் மற்றும் சிறிய ரக கார்கள் மீதான வரியில் எவ்விதமான மாற்றமும் இல்லை.


Click it and Unblock the Notifications