டெல்லி: பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான 'ஜிஎஸ்டி-ன் கீழ் பெட்ரோல் கொண்டு வரப்பட்டால் பெட்ரோல் விலை குறையும் என்று' டிவிட் போட்டதை அடுத்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி குழுவிற்குப் பல கேள்விகள் வந்தபடி உள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை 73.89 ரூபாயாக உள்ளது, இதுவே டெல்லியில் 71.27 ரூபாய் என இருக்கின்றது. இதுவே பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.
2014 - 2017
2014-ம் ஆண்டுப் பெட்ரோல் விலை 70 ரூபாயாக உயர்ந்த போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 98 டாலராக இருந்தது. ஆனால் தற்போது அந்த விலை 50 டாலராகக் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த மாற்றம் இல்லை.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி டெல்லியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் லிட்டர் பெட்ரோலின் விலை 26.65 ரூபாயாக இருக்கின்றது. டீலர்களுக்கு 30.70 ரூபாய்க்கு வாங்குகின்றார்கள். ஆனால் மக்களுக்கு விற்பனைக்கு வரும் போது 70.39 ரூபாய் லிட்டர் எனப்படுகின்றது. அப்படியானால் 39.41 ரூபாயினை வரியாகவும், டீலர்களின் கமிஷனாகவும் மக்கள் செலுத்தி வருகின்றார்கள்.
அதிக வரி வசூல் செய்யப்படும் மாநிலங்கள்
இதுவே மும்பை, தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இன்னும் அதிகமான வரி வசூல் செய்யப்படுகின்றது. ஏன் பாஜக் ஆலும் மாநிலங்களிலும் இதே தான் நிலை.
நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி தமிழகத்தில் பெட்ரோல் மீது 34 சதவீத வாட் வரி வசூலிக்கப்படுகின்றது. இதுவே டெல்லியில் 27 சதவீதமாகவும், மும்பையில் 47.64 சதவீதமாகவும் உள்ளது. இதனால் இந்த மாநிலங்கள் இடையில் 9 ரூபாய் வரை விலையில் மாற்றம் உள்ளன.
மாநிலங்கள் இடையில் வேறுபாடு
மறைமுக வரி உள்ள பல பொருட்கள் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலியன் பொருட்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் வரவில்லை. எனவே ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமான வாட் வரியை பெட்ரோல் மீது விதிக்கின்றன.
அதிக விலையில் மத்திய அரசுக்கு உள்ள பங்கு
மத்திய அரசு பெட்ரோல் மீது கலால் வரியை வசூலிக்கிறது. 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மத்திய அரசு 54 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ளது. இதுவே சராசிரியாக வாட் வரியில் 47 சதவீதமாக உள்ளது. மேலும் டீலர்களின் கமிஷனும் 73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதுவே டீசலை எடுத்துக்கொண்டால் 154 சதவீதம் வரை கலால் வரி உயர்வைச் சந்தித்துள்ளது. வார் 48 சதவீதமும், டீலர்கள் கமிஷன் 73 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017 ஆண்டு முதல் டீசல் மீதான கலால் வரி 12 முறை உயர்ந்துள்ளது.
போட்டுப் போடும் அரசுகள்
மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வரியை உயர்த்தியதால் பெட்ரோல் விலை குறைந்தும் 2014 விலையிலேயே விற்கப்படுகின்றது.
லாபம் உயர்ந்த பொருட்கள்
அதே நேரம் பெட்ரோலியம் பொருட்கள் மீதான அலாபம் 2014 - 2015 நிதி ஆண்டில் 3.32 லட்சம் கோடியும், 2016-2017 நிதி ஆண்டில் 5.24 லட்சம் கோடியும் கூடுதலாக வருவாயினைச் சம்பாதித்துள்ளன.
சரி, இப்போது பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் கொண்டு வரப்பட்டால் என்ன ஆகும் என்று இங்குப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி
தற்போது ஜிஎஸ்டி 0, 5, 12, 18 மற்றும் 18 சதவீதங்களாக உள்ளது. இதில் பெட்ரோல் டீசல் மீது 12 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வாய்ப்பே இல்லை.
28 சதவீத ஜிஎஸ்டி
எனவே அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதம் வரியை பெட்ரோலுக்கு விதித்தால் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் 43.44 ரூபாய் என விற்கப்படும். இதுவே டீசல் 48.88 ரூபாயாக விற்கப்படும்.
பெட்ரோலிய பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்படவில்லை?
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications