இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதற்குச் சரியான நேரம் என்றால் அது விழக்காலச் சலுகைகள் வழங்கும் நேரமாகும்.
எனவே இதுபோன்ற நேரங்களில் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கவர வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய இணையதள ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.
பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
பிளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது பொருட்கள் வாங்குபவர்களில் 65 சதவீதம் நபர்கள் ஆண்களாக உள்ளனர். மீதம் இருப்பவர்கள் தான் பெண்கள்.
பிளிப்கார்ட் பெண்களை எப்படி இலக்காக அமைக்கின்றது?
அதிகப் பெண் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகப் பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்களை விட எந்தப் பிறாண்டுகளை எல்லாம் பெண்கள் அதிகம் விரும்புகின்றார்கள் என்பதை ஆராய்ந்து அந்தப் பிறாண்டுகளைத் தங்களத்தில் பட்டியலிட வைத்துள்ளது.
எந்தப் பிரிவுகளில்
அதில் முக்கியமாகப் பெண்கள் அதிகம் விரும்பி வாங்கும் பேஷன் பிராண்டுகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் புத்தகம் போன்றவற்றில் பிளிப்கார்ட் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.
அதிகச் செலவு செய்யும் பெண்கள்
ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிகளவில் செலவு செய்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தங்களது 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் எண்ணிக்கையில் பெண்களை அதிகம் வாங்க வைக்க வேண்டும் நோக்கத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
சவாலான பணி
பெண்களை அதிகம் கவர வேண்டும் என்பது சவாலான பணி ஆகும். ஏன் என்றால் இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் இணையதள ஷாப்பிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் என்று ஆய்வு கூறுகின்றது. அதே நேரம் இந்த நிலை மாற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆண்களின் ஆதிக்கம்
பிளிப்கார்ட்டின் பேஷன் தளமான மைந்திராவில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ஆடைகளை வாங்குகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக அதிக ஆண் பயனர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இணையதளங்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications