இந்திய ரயில்வேயின் சேவையினை ஊக்குவிக்க மத்திய அமைச்சகம் புதன்கிழமை ஊழியர்களுக்கு உற்பத்தித் திறன் பொருத்த போனஸை விழாக்காலத்தினை முன்னிட்டு அறிவித்துள்ளது.
உற்பத்தித் திறன் பொருத்த போனஸ் என்பது ஊழியர்களின் சேவை பொருத்த ஊக்கமளிக்கும் வகையில், அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், ரயில்வே வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு, வேகம் மற்றும் சேவையை உறுதி செய்யவும் ரயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்குகின்றது.
ரயில்வே ஊழியர்கள் எவ்வளவு போனஸ் பெறப்போகிறார்கள் என்ற விவரத்தினை விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
எவ்வளவு போனஸ்
கெசெட் அதிகாரம் இல்லாத ரயில்வே ஊழியர்கள் சிறந்த உற்பத்தித் திறனுடன் 2016-2017 நிதி ஆண்டில் செயல்பட்டு இருப்பவர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்திற்கு இணையான தொகை போனஸ் ஆக வழங்கப்படும். இதில் ஆர்பிஎப்/ஆர்பிஎஸ்எப் ஊழியர்கள் கிடையாது.
எவ்வளவு ஊழியர்கள்
ரயில்வே நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 12.30 லட்சம் ஊழியர்கள் கெசெட் அதிகாரம் இல்லாதவர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்தப் போனஸ் கிடைக்கும்.
எப்போது போனஸ் தொகை கிடைக்கும்?
ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் 78 நாட்கள் போனஸ் ஆயுதபூஜை, நவராத்திரி பண்டிகளுக்கு முன் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எதற்காகப் போனஸ்?
ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், ரயில்வே வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு, வேகம் மற்றும் சேவையை உறுதி செய்யவும் போனஸ் அளிக்கப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications