சென்னை: உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் புரட்சி, இந்தியாவில் தவறான நேரத்தில் ஊக்குவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகள் (விஐபி) எண்ணிக்கை புதிய உயர்வை அடைந்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவையின் பயன்படுத்தும் அளவீடு கடந்த சில வருடங்களாகவே தனியார் நிறுவனங்களில் அதிகரித்து வந்த நிலையில், மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா என்ற மிகப்பெரிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதனால் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன..? இதனால் சமானியர்களின் வாழ்வியல் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.
யெஸ் வங்கி
கடந்த ஒரு வருடத்தில் அதிகளவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான டிஜிட்டல் சேவையை வழங்கியதிலும் இந்திய வங்கித்துறை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் யெஸ் வங்கி சுமார் 12 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, இதில் பெரும் பகுதியினர் விற்பனை பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்கித்துறைக்குள் நுழைந்தால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரேயொரு வங்கி கிளையுடன் வர்த்தகம் செய்ய முடியும்.
இப்போது மொபைல் போன்களை விற்பனை செய்வது போல் வங்கி திட்டங்களை மக்கள் மத்தியில் விற்பனை செய்யக் கூடுதலான ஆட்களை நியமிக்க வேண்டும் அவ்வளவு தான், காலப்போக்கில் ஆட்களைக் குறைத்து சேவைகளை மேம்படுத்தினால் போதுமானது.
இதுவே இன்றைய நிலை.
பிரச்சனை
அப்படியென்றால் டிஜிட்டல் சேவைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளது தவறா என்று நீங்கள் கேட்டால்.. அதற்குப் பதில் இல்லை.
இப்போது இருக்கும் பிரச்சனையை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி பழைய வேலைவாய்ப்புகளை முழுவதுமாக நீக்கியுள்ளது, மற்றொன்று போதுமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.
இது இரண்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு தடைகல் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
சுருக்கமாக..
உதாரணமாக வங்கித்துறையை எடுத்துக்கொள்வோம். வங்கித்துறையில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் சேவை தரம் உயர்ந்தாலும், 500 பேர் செய்ய வேண்டிய வேலையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்டு முடிக்க முடியும் வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிற துறைகளில்..
இந்தப் பிரச்சனை வங்கித்துறையில் மட்டும் அல்லாமல் ஐடி, ஆட்டோமொபைல், உற்பத்தி, சேவைத் துறை எனப் பல இடங்களில் வந்துள்ளது.
இன்று ஐடி நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைக்கு ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முக்கியக் காரணமாகும். ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தற்போது பிற துறை நிறுவனங்களுக்கு அளிக்கும் டிஜிட்டல் சேவையின் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் லாபத்தையும் அடைந்து வருகிறது.
உற்பத்தி துறை
இந்திய உற்பத்தித் துறையில், 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் 30-40 சதவீதம் அளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது என டீம்லீஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்களை அறிவித்துள்ளது.
எல் அண்ட் டி
அதேபோல் நாட்டின் முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி என அழைக்கப்படும் லார்சன் மற்றும் டியூப்ரோ நிறுவனம் அடுத்த 2 வருடங்களுக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது.
கூடுதல் பாதிப்புகள்
டிஜிட்டல் ஊக்குவிப்பு திட்டத்தால் ஏற்கனவே வேலைவாய்ப்புச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மிகப்பெரிய வர்த்தக மாற்றத்தை உண்டாக்கும் நடவடிக்கையைக் கொண்டு வந்தது.
இதனால் மொத்த சப்ளை செயின் வர்த்தகமும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வகைப்படுத்தாத துறையிலும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்தது.
நாணய மதிப்பு
வேலைவாய்ப்பு சந்தை மற்றும் வர்த்தகம் தொடர்ந்து பாதிப்பு அடைந்ததால் நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாமல் ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது.
7.7 பில்லியன் டாலர்
இந்தப் பாதிப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஏற்க மறுத்து வந்த மத்திய அரசுகள், நாட்டின் வளர்ச்சி கணிப்புகள் வெளியான பின் இந்த வருடம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்கக் கூடுதலாக 7.7 பில்லியன் டாலர் அதாவது 50,000 கோடி ரூபாயைச் செலவிட முடிவு செய்ததுள்ளது.
முதலீடு
நாட்டின் முதலீடு தற்போது இருக்கும் இந்திய பொருளாதாரச் சூழ்நிலையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சந்தையில் முதலீடு செய்து வருவதைக் குறைந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் ஆக்டோபர் மாதத்தில் 12 சதவீதம் குறைவான பணப் பரிமாற்றத்துடனும், வங்கி வைப்பில் கூடுதலாக 8 சதவீத பணத்துடனும் இயங்கி வருகிறது.
வேலையில்லா திண்டாட்டம்..!
ஐடி துறை
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications