மும்பை: மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்த புதுப்புது திட்டங்கள் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தகச் சந்தையும் அதிகளவில் பாதித்து இந்திய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த 50,000 கோடி ரூபாய் வரை கூடுதலாகச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான முதலே மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்திலும் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய சந்தையில் நிலவும் மோசமான சூழ்நிலையில் மற்றும் அமெரிக்கா வட கொரியா மத்தியில் நிலவும் பதற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதனாலேயே கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் மந்தமான வர்த்தக சூழ்நிலை நிலவியது.
லாப நோக்கில் விற்பனை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை கருத்தில் கொண்டு இந்திய சந்தையில் செய்திருந்த முதலீட்டை லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை இன்றைய வர்த்தகத்தில் விற்பனை செய்து வெளியேறினர்.
வளர்ச்சி கணிப்புகள்
பொருளாதார வளர்ச்சியில் சீனாவிற்கு கடுமையான போட்டியாக இருந்த இந்தியா தற்போது சீனாவை விட குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளதாக OECD அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ்
இதனுடன் வடகொரியாவில் நிலவும் பிரச்சனைகள் திங்கட்கிழமை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் பொழுதே சரிவுடன் துவங்கிய நிலையில், இன்று 380 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.61 புள்ளிகள் சரிந்து 31,646.83 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் அதிகளவிலான சரிவை சந்தித்து, திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 89.10 புள்ளிகள் சரிந்து 9,875.30 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications