அரிசி, உணவு தானிய உற்பத்தி 3% வரை சரிவடையும்.. மத்திய அரசு அறிவிப்பு..!
2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் உணவு தானியங்களின் கோடைக்கால உற்பத்தி அளவு 2 சதவீதம் வரை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த வருடம் 134.67 மில்லியன் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி இந்த வருடம் அதிகளவில் பாதிக்கப்படும் என மத்திய அரசு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

கோடைக்கால அரிசி உற்பத்தி அளவுகள் 2 சதவீதம் வரை சரிந்து 94,.48 மில்லியன் டன் வரையிலும், உணவு தானியங்களின் உற்பத்தி அளவு 7.5 சதவீதம் குறைந்து 8.71 மில்லியன் டன் அளவிற்குக் குறையும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல் பருத்தி உற்பத்தி அளவும் இந்த வருடம் 33 மில்லியன் பேலில் இருந்து 32.37 மில்லியன் பேல் ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications