பேக் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி எம்ஆர்பி விலையில் மாற்றி விற்கப்படாமல் இருந்தால் அக்டோபர் 1 முதல் அனைத்துச் சரக்குகளும் பரிமுதல் செய்யப்படும்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்துப் பொருட்களுக்கு மூன்று மாதத்திற்குள் ஜிஎஸ்டி எம்ஆர்பி ஸ்டிக்கரை மாற்றி ஒட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
காலக்கெடு
அதற்கான காலக்கெடு இன்றோடு 5 நாட்களில் முடிவடையும் நிலையில் பழைய எம்ஆர்பி விலையில் விற்கப்படும் பொருட்கள் பரி முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விலையை மாற்றுவது
ஜிஎஸ்டி விலையில் எம்ஆர்பி விலை ஸ்டிக்கர் ஒட்டி அல்லது ஸ்டாப் அடித்து மாற்றி அமைக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது.
குழப்பம்
எனவே வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் இடையில் ஜிஎஸ்டி-ன் கீழ் எம்ஆர்பி விலை எந்த மாதிரியான மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற குழப்பம் நிலவி வந்தது.
விளம்பரம்
ஒருவேலை ஜிஎஸ்டி-ன் கீழ் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டால் உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பேக் செய்பவர்கள் அந்தப் பொருட்களின் தற்போதைய விலையை விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மீது புதிய எம்ஆர்பி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 5,12, 18 மற்றும் 28 சதவீத வரி வரம்புகள் உள்ளன. இவை பொருட்களைப் பொருத்து மாறும். இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்றுள்ள மிகப் பெரிய வரி சீர் திருத்தம் இது எனக் கூறப்படுகின்றது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications