சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை உயர்ந்தது, இதற்கு முக்கியக் காரணமாக இந்தியாவில் தற்போது உள்ள விழாக் காலத்திற்கான தேவையே என்று கூறப்படுகின்றது.
சிங்கப்பூரில் தங்கம் விலை 0.35 சதவீதம் சரிந்து 1,305.70 டாலராக இரு அவுன்ஸ் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் வெள்ளி விலை 0.41 சரிந்து அவுன்ஸ் 17.09 டாலர்கள் என விற்பனை செய்யப்படுகின்றது.
ரூபாய் மதிப்பு
மேலும் டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு சரிவும் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு முறை 6 மாத சரிவை சந்தித்துள்ளது ரூபாயின் மதிப்பு. எனவே அதிக விலை கொடுத்துத் தங்கம் வாங்கும் நிலைக்குக் கடை காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலம்
பண்டிகை காலம் நெருங்கும் போது தங்கம் மீதான விலை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது தேவை குறைந்தால் தான் தங்கம் விலை குறையும்.
அமெரிக்க, வட கோரியா போர் சூழல்
ஒருபக்கம் அமெரிக்க, வட கோரியா இடையிலான போர் மூலும் சூழலால் இந்திய பங்கு சந்தைச் சரிவும் காரணமாகக் கூறப்பட்டாலும் உலகச் சந்தையில் தங்கம் விலை 0.35 சதவீதம் வரை சரிந்தே காணப்படுகின்றது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (26/09/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 2872 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 22,976 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3016 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,128 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கார்ட் 10 கிராம் தங்கம் 30,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications