15 ரூபாய் வரி செலுத்த தவறியவருக்கு ரூ.20,000 அபராதம்.. ஜிஎஸ்டி அட்ராசிட்டி..!

எங்காவது 1,00,000 சதவீதம் அபராதம் என்று நீங்கள் பார்த்து இருக்கின்றீகளா அல்லது கேள்விப்பட்டதுண்டா? அன்மையில் ஆந்திராவைச் சேர்ந்த வணிகர் ஜிஎஸ்டி கீழ் இது போன்று சிக்கியுள்ளார் என்றால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.

விற்பனை வரி அல்லது சேவை வரியைத் தாமதமாகச் செலுத்தும் போது அபராதம் விதிப்பது வழக்கமான ஒன்று ஆனால் இவ்வளவு அதிகமான சதவீதங்களில் எப்படி அபராதம் விதித்துள்ளனர், எதற்காக விதித்துள்ளனர் என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

நோட்டிஸ்

நோட்டிஸ்

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 15 ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த தவறியதால் 20,000 ரூபாய் அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தண்டனைக்கு உறியக் குற்றம்

தண்டனைக்கு உறியக் குற்றம்

மேலும் நீங்கள் தெரிந்தே 15 ரூபாய் ஜிஎஸ்டி-ஐ செலுத்த தவறியுள்ளீர்கள், இது ஜிஎஸ்டி சட்டத்துக்கு எதிரானது எனவும் தண்டனைக்கு உட்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அதிகாரிகள்

கண்காணிப்பு அதிகாரிகள்

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஜிஎஸ்டி விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றதா என்று ஆய்வைச் செய்ய 200 அரசு அதிகாரிகளை நியமித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியான முதல் சிக்கலாகப் பார்க்கப்படுகின்றது.

15 ரூபாய் வரி ஏய்ப்பு எய்ப்பு எப்படி நடந்துள்ளது?

15 ரூபாய் வரி ஏய்ப்பு எய்ப்பு எப்படி நடந்துள்ளது?

சரி, இந்த வணிகர் எப்படி அந்த 15 ரூபாய் வரி ஏயப்பை செய்து சிக்கியுள்ளார் என்று தெரியுமா? 300 ரூபாய்க்கு மேல் சட்டை ஒன்றை விற்றுள்ளார். ஆனால் இதற்கான தொகை 300 ரூபாய் பெற்ற இவர் ஜிஎஸ்டி வரியான 15 ரூபாயினை வசூலிக்கவில்லை. அதிகாரிகள் இதனைச் சோதனை மூலம் கண்டறிந்து அபராதம் விதித்துச் செப்டம்பர் 5-ம் தேதி நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.

அபராதம் மற்றும் தண்டானை விவரங்கள் சரியாக இல்லை

அபராதம் மற்றும் தண்டானை விவரங்கள் சரியாக இல்லை

ஆனால் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இதுவரை எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என்ற விவரங்கள் தெளிவாக இல்லை. சோதனை செய்த அதிகர்களின் விருப்பப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-ஐ விட்டுச் சிறு வணிகர்கள் வெளியேறும் அபாயம்

ஜிஎஸ்டி-ஐ விட்டுச் சிறு வணிகர்கள் வெளியேறும் அபாயம்

அதிகாரிகளின் இதுபோன்ற அபராத விதிப்பு தொடர்ந்தால் பல சிறு வணிகர்கள் 20 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் இருக்கும்பட்சத்திலும் ஜிஎஸ்டி பதிவு செய்து வணிகம் செய்து வருவதில் இருந்து விலகுவார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தண்டனைத் தேவையில்லை

தண்டனைத் தேவையில்லை

சமீபத்திய விண்டேஜ் சட்டத்தின் கீழ் வரிச் செலுத்துவதில் நடக்கும் சிறு தவறுகளுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது தவறு என்று டெலியிட் இந்தியாவின் பங்குதாரரான எம் எஸ் மனி கூறுகிறார்.

வணிகர்களை எது ஊக்குவிக்கும்?

வணிகர்களை எது ஊக்குவிக்கும்?

சிறு தவறுகளுக்கு அபாராதம் விதிப்பதை தவிர்த்தால் மட்டுமே ஜிஎஸ்டி-ன் கீழ் வராத வணிகர்களை ஜிஎஸ்டி-ல் சேர ஊக்குவிக்கும். இதுப்போன்று சிறு தவறுகளுக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கும் போது பல வணிகர்கள் ஜிஎஸ்டி-ஐ விட்டி வெளியேறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

எப்போது தண்டனை விதிக்கலாம்?

எப்போது தண்டனை விதிக்கலாம்?

வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி-ன் கீழ் உள்ள அனைத்து விவரங்களும் தெரிந்த பிறகும், தற்போதைய சிக்கல்கள் எல்லாம் தீர்ந்த பின்பு தண்டனை விதிக்கலாம் என்றும் மனி கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+