இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அவர்களின் பதிவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இப்பதியில் பலகட்ட ஆலோசனை தேர்வுகளுக்கு பின்பு ராஜ்நிஷ் குமார் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
3 வருடம்
எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைப்பிற்காக இவ்வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்பதவியில் அடுத்த 3 வருடத்திற்குத் தொடர்ந்து பணியாற்ற ராஜ்நிஷ் குமாரை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு.
ராஜ்நிஷ் குமார்
ராஜ்நிஷ் குமார் தற்போது எஸ்பிஐ வங்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருக்கும் ஒரு முக்கிய நிர்வாக இயக்குனர் ஆவார்.
நேர்முகத் தேர்வு
இப்பதவிக்குப் புதிய நபரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசும், நிதியமைச்சகமும் எஸ்பிஐ நிர்வாகக் குழுவில் இருக்கும் 4 இயக்குனர்களை ஜூன் மாதத்தில் நேர்முகத் தேர்வு செய்தது.
அக்டோபர் 7
வருகிற அக்டோபர் 7ஆம் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications