மோடியின் அடுத்த டார்கெட் இவர்கள்தான்.. புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil
இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கடந்த 7 மாதத்தில் நடந்தக் கூத்து பெரிய கதை.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஹய் நெட் வொர்த் இன்டீஜ்வெல்ஸ் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஹய் நெட் வொர்த் இன்டீஜ்வெல்ஸ் என்றால் அதிகம் பணம் அல்லது சொத்துக்களை வைத்துள்ளவர்களை இப்படிக் கூறப்படுகிறது.

புதிய வரி..

இந்தியாவில் அதிகப் பணம் படைத்தவர்கள் பொரும்பாலனவர்கள் குடும்ப டிரஸ்ட் வைத்து தங்களது சொத்துக்கள் மற்றும் பணத்தின் மீதான பாதிப்புகளைக் குறைத்துக் குறைந்த அளவிலான வரியை மட்டுமே செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே டிரஸ்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அதிகப் பணம் வைத்துள்ள தனிநபர் மீது inheritance tax விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

 

பரம்பரை வரி

பரம்பரை வரி என அழைக்கப்படும் inheritance tax, தனிநபர்கள் குடும்ப வழியாகப் பெறப்படும் சொத்துக்கள் மற்றும் பணத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வரி.

இந்தியாவில் உயில் வழியாகவோ அல்லது ஒரு இறந்த பின் வரும் சொத்து அல்லது பணத்தின் மீது வரி கிடையாது. ஆனால் கிடைக்கும் சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைத்தால் அதற்கு வருமான வரி விதிக்கப்படும்.

 

இந்தியாவில் இல்லை..

இதுவரை இந்தியாவில் பரம்பரை வரி (inheritance tax or estate Tax) இல்லாத நிலையில், பல பணக்காரர்கள் குடும்ப டிரஸ்ட் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வருமானம் மற்றும் வரியை ஏய்ப்புச் செய்து வருகின்றனர்.

இவர்கள் மீது தற்போது பரம்பரை வரியை விதிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

 

எவ்வளவு வரி..

இந்த வரி 5 முதல் 10 சதவீதம் வரையில் இருக்கும். ஆனால் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்படமாட்டாது, குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தால் மட்டுமே இந்த வரி விதிக்கப்படும்.

இதன் அளவீடுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரியவரும்.

 

அடுத்தப் பட்ஜெட்

சர்வதேச நாடுகளில் விதிக்கப்படும் இந்தப் பரம்பரை வரி, இந்தியாவிலும் கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி மக்கள் மத்தியில் இதன் பார்வை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பும் அமலாக்கமும் அடுத்தப் பட்ஜெட் அறிக்கையில் வெளிவர உள்ளது.

 

617 பேர்

சீன பத்திரிக்கை நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் மட்டும் சுமார் 617 ஹய் நெட் வொர்த் இன்டீஜ்வெல்ஸ் உள்ளதாகவும் அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 154 மில்லியன் டாலர் எனத் தெரிவித்தள்ளது.

வரலாறு..

இந்தியாவில் inheritance tax எனக் கூறப்படும் பரம்பரை வரி 1953ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது, ஆனால் 1986ஆம் ஆண்டு இது முழுமையாகக் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லாபம்..

மத்திய அரசு பரம்பரை வரி கொண்டு வருவதன் மூலம் குடும்ப டிரஸ்டுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

காரணம் டிரஸ்ட் உருவாக்கப்படுவதால், சொத்துக்கள் மற்றும் பணம் நேரடியாகத் தனிநபர் பெயருக்கு மாற்றப்படுவதில்லை, அனைத்தும் டிரஸ்ட் அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதால் அதிகளவிலான வரி ஏய்ப்பு நடக்கிறது. அப்படித் தனிநபர் பெயருக்கு மாற்றினால் அதிகளவிலான பத்திர கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

வரி ஏய்ப்பு செய்வதற்காகவே டிரஸ்ட் அமைப்புகள் வங்கி கணக்கு, பங்கு முதலீடு மற்றும் அசையா சொத்துகள் மட்டுமே வைத்துக்கொள்கிறது.

 

இப்போ சொல்லுங்க..

இந்தியாவில் பரம்பரை வரியான inheritance tax வேண்டுமா..? வேண்டாமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi government plans to reintroduced tax on HNI

Modi government plans to reintroduced tax on HNI
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns