110 நிறுவனங்களை சமாளிக்க புதிய திட்டம்.. அதிரடி முடிவுகளுடன் சந்திரசேகரன்..!

இந்தியாவின் பெரிய பலதுறை நிறுவன குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் பல்வேறு சிக்கலான சூழ்நிலையில் புதிய தலைவராக டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சந்திரசேகரன் அவர்களை நியமித்தது.

டாடா குழுமம் ஏற்கனவே பலதுறைகளில் இருக்கும் நிலையில், தற்போது பாதுகாப்பு, இன்பராஸ்டக்சர், நுகர்வோர் மற்றும் ரீடைல், நிதியியல் சேவைகள், ஹோட்டல் மற்றும் ஏர்லையன்ஸ் துறைகளில் புதிதாக இறக்கியுள்ளது.

இதன் மூலம் கிட்டதட்ட டாடா குழுமத்தில் தற்போது 110 நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அனைத்து நிறுவனங்களையும் ஒரேயொரு தலைமை கொண்டு நிர்வகிப்பது மிகவும் கடினம் என்பதால் சந்திரசேகரன் புதிதாக ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

முக்கியப் பொறுப்பு

முக்கியப் பொறுப்பு

சந்திரசேகரன் அவர்களுக்குப் புதிய நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை உருவாக்குவதை விடவும் இக்குழுமத்தின் 3 பெரிய நிறுவனங்களான டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்விதமான தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், டாடா டெலிசர்வீசஸ் போன்று அதிக நஷ்டத்தை அளிக்கும் நிறுவனத்தை என்ன செய்வது என்பதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டி இருக்கிறது.

கூட்டணி நிறுவனங்கள்

கூட்டணி நிறுவனங்கள்

அதுமட்டும் அல்லாலமல் விமானச் சேவை முதல் பல துறையில் டாடா குழுமம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்திச் சேவை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது எப்படி என்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் எந்த ஒரு நிறுவனத்தையும் கைவிட முடியாது, இதனைச் சரியான முறையில் நிர்வாகம் செய்ய 110 நிறுவனங்களைத் தனித்தனியாக நிர்வாகம் செய்வது கடினமான ஒரு வேவை.

இதற்காகவே சந்திரசேகரன் முக்கியத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

 

 புதிய திட்டம்..

புதிய திட்டம்..

முதலில் டாடா குழுமம் ஒரு கடினமான வடிவமைப்பில் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதனை முதலில் எளிமையாக 110 நிறுவனங்களைத் தனித்தனியாகக் கவனிப்பதில் இருந்து 5,6,7 என்ற குழு நிறுவனங்களாகப் பிரிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான பணிகளையும் எளிமையான முறையில் நிர்வகிக்கத் திட்டமிட்டுள்ளோம் எனச் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

8 மாதம

8 மாதம

டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 53வயதாகும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது.

இவர் தற்போது இருக்கும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், இருக்கமான நிதியியல் முடிவுகளுடன், முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை அளிக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்.

 

25.5 பில்லியன் டாலர் கடன்

25.5 பில்லியன் டாலர் கடன்

டாடா குழுமத்தின் மீது தற்போது 25.5 பில்லியன் டாலர் கடனில் இயங்கி வருகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் இது 1,66,668 கோடி ரூபாய். ஆகவே முதலில் நிறுவனங்களின் வருவாய் அறிக்கையை மேம்படுத்தம் பணிகளை முதற்கடமையாக வைத்துள்ளார் சந்திரசகரன்.

இதற்காக இவர் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியத்தை அளிக்கிறது.

 

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம் தொடர்ந்து குறைவான வர்த்தகத்தையும் வருவாயும் பெற்று வந்த நிலையில், குறைவான வர்த்தகம் மற்றும் அதிகச் செலவுகளை அளிக்கும் ஐரோப்பிய வர்த்தகத்தை மேம்படுத்த Thyssen Krupp நிறுவனத்துடன் சந்திரசேகரன் தலைமையில் கூட்டணி வைத்துள்ளது டாடா ஸ்டீல்.

இதன் மூலம் ஐரோப்பிய டாடா ஸ்டீல் நிறுவனம் இனி இந்திய தலைமையை நம்பியிருக்க அவசியமில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்குமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

டாடா பவர்

டாடா பவர்

டாடா பவர் நிறுவனத்தின் கீழ் இருக்கும் முத்ரா பவர் பிளாட் அதிகளவிலான நஷ்டத்தை அளிக்கும் நிலையில் இதனை விற்பனை செய்யவோ அல்லது இதன் வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார் சந்திரசேகரன்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

கடந்த சில வருடங்களாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை பெரிய அளவில் இல்லாத காரணத்தால், தற்போது சந்திரசேகரனின் திட்டமிடல் படி டாடா மோட்டாஸ் வர்த்தக வாகன தயாரிப்பிலும் அதன் வர்த்தகத்திலும் முக்கியக் கவனம் செலுத்தி வருகிறது.

இது கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் சந்திரசேகரன் நம்புகிறார்.

 

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ்

பல்வேறு காரணங்களினால் டாடா டெலிசர்வீசஸ் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் பணத்தை முதலீடு செய்தால் வெற்றி பெறலாம் என யோசித்தால், இந்நிறுவனத்திற்குத் தற்போது 50,000 முதல் 60,000 கோடி ரூபாய் வரையிலான தொகை தேவைப்படுகிறது.

ஆகவே இது சரியான திட்டமில்லையென முடிவு செய்து, இதனை முழுமையாக அல்லது பகுதியை விற்பனை செய்யும் முடிவிற்குச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இப்படி ஒவ்வொரு முடிவையும் குறைந்த காலகட்டத்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் எடுத்து வருகிறார் சந்திரசேகரன்.

 

டிசிஎஸ் நிறுவனத்தில் செய்ய ஆச்சரியம்..

டிசிஎஸ் நிறுவனத்தில் செய்ய ஆச்சரியம்..

டாடா குழுமத்தில் அதிக வருவாய் அளிக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் சந்திரசேகரன் தலைவராக இருக்கும்போது, வர்த்தகம் முழுமையான நிலையை அடைந்த நிலையில் புதிய வர்த்தகத்தைத் தேடுவதற்குக் கடினமான சூழ்நிலை உருவாகும் போது சந்திரசேகரன் முக்கியமான முடிவை எடுத்தார்.

உடைப்பு

உடைப்பு

டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தகப் பிரிவுகளைத் தனித்தனியாக உடைத்து அதனைத் தனித்தனியாக நிர்வாகம் செய்யத் தலைவர்களை நியமித்தார் சந்திரசேகரன்.

இதன் பின் டிசிஎஸ் நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகவும், மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகவும் உருவெடுத்தது.

 

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

ஆனால் தற்போது டாடா சன்ஸ் தலைவராகச் சந்திரசேகரன் செய்வது நிறுவனறங்களை இணைப்பது. காரணம் டிசிஎஸ் நிறுவனத்தில் வர்த்தகத் துறை ஒன்று தான், ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தில் வர்த்தகத் துறைகள் வேறு.

எனவே துறை சார்ந்து அல்லது தொடர்புடைய நிறுவனங்களைக் குழு செய்யப்பட்டால் நிர்வாகம் செய்வது எளிமையாகும் எனச் சந்திரசேகரன் முடிவு செய்துள்ளார்.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

சந்திரசேகரன் டிசிஎஸ் நிறுவனத்தில் செய்த நடவடிக்கையைத் தான் விஷால் சிக்கா செய்யத் திட்டமிட்டார். ஆனால் தற்போது அவர் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறியதால் இத்திட்டம் முடங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+