வங்கி கணக்கை மூட வேண்டும் என்றால் ரூ.500 + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அன்மை காலங்களாக வங்கி சேவை பயன்படுத்து வரும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளை நிர்வகிக்கப் பல கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர். ஆனால் இதில் பலரும் பாதிக்கப்பட்டது எதுவென்றால் அது மினிமம் பேலன்ஸ் வைக்காமல் அபராதம் செலுத்தியதாக இருக்கும்.

சரி, குறைந்தபட்ச இருப்புத் தொகையினை வங்கி கணக்கில் வைக்க முடியாது என்று வங்கி கணக்கை மூட சென்றால் அதற்கும் கட்டணம் என்று வங்கிகள் வாங்குகின்றனர். இது என்னடா வங்கி கணக்கை நிர்வகிக்கவும் கட்டணம் பிடிக்கின்றனர், வங்கி கணக்கை மூடவும் கட்டணம் பிடிக்கின்றனர் என்று வாடிக்கையாளர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

மறு பக்கம் வங்கி சேவை மீதும் கட்டண கொள்ளைகள் மீதும் கோவத்தினை வெளிப்படுத்தும் வாடிக்கையாளர்கள் நாங்கள் வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்தினை வைத்துத் தானே வங்கிகள் கடன் அளித்து வட்டி பெற்றுச் சம்பாதிக்கின்றன கேள்விகளும் இன்று சமுக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் வங்கி கணக்கை மூடுவதற்கான விதிகள் மற்றும் கட்டணங்கள் எவ்வளவு என்பதை விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

ஒரே வருடத்தில் வங்கி கணக்கை மூடுதல்

பொதுவாக வங்கி கணக்கை திறந்த ஒரே வருடத்தில் மூட வேண்டும் என்றால் அதற்கான கட்டணத்தினை வங்கியே ஏற்க வேண்டும். அவற்றைத் தான் வங்கி கணக்கை மூடுவதற்கான கட்டணமாக வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து வருகின்றன. அன்மையில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி கணக்கை மூடுவதற்கான கட்டணத்தினை மாற்றி அமைத்துள்ளது. இந்தக் கட்டண முறை அக்டோபர் 1 முதல் மலுக்கு வந்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை திறந்து ஒரு வருடம் பயன்படுத்திய பிறகு மூட வேண்டும் என்றால் கட்டணம் ஏதும் இல்லை.

கணக்கை மூட கட்டணம் எவ்வளவு?

முன்பு எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக வங்கி கணக்கை திறந்த ஒரு வருடத்திற்கு முன்பு மூட வேண்டும் என்றால் 500 ரூபாய் + ஜிஎஸ்டி-ஐ கட்டணமாக வசூலித்து வந்தது. தற்போது அதுவே வங்கி கணக்கை திறந்து ஒரு வருடம் முடிவதற்குள் மூட வேண்டும் என்றால் 500 ரூபாய் + ஜிஎஸ்டி-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கு வைத்துள்ளவர் இறந்துவிட்டால் என்ன ஆகும்?

இதுவே எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர் இறந்துவிட்டால் கணக்கை மூட எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. முன்பு இதற்கும் 500 ரூபாய் + ஜிஎஸ்டி-ஐ கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

அடிப்படை சேமிப்பு கணக்கு

அடிப்படை சேமிப்புக் கணக்கை வைத்துள்ளவர்கள் வங்கி கணக்கினை மூட வேண்டும் என்றால் எந்தக் கட்டணமும் இல்லை.

14 நாட்களில் வங்கி கணக்கை மூடுதல்

ஒரு நபர் வங்கி சேமிப்புக் கணக்கைத் திறந்து 14 நாட்களுக்கு மூட விரும்பினால் எந்தக் கட்டணமும் கிடையாது.

பொதுவாக வங்கிகள் சேமிப்புக் கணக்கைத் திறந்த 14 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு மூடினால் கட்டணம் வசூலிப்பதில்லை. கணக்கை திறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு மூட வேண்டும் என்றால் எந்தக் கட்டணமும் இல்லை.

 

நடப்பு கணக்கு

இதுவே நடப்புக் கணக்கை துவங்கியவர்கள் 14 நாட்களில் மூட வேண்டும் என்றால் ரூ.1,000 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

பொதுவாக நடப்பு வங்கி கணக்கை மூடும் போது வங்கிகள் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஜிஎஸ்டி உடன் வசூலிக்கின்றன.

 

எதற்காக இந்தக் கட்டணம்?

வங்கி கணக்கை திறக்கும் போது அளிக்கப்படும் ஸ்டார்ட்டர் கிட், செக் புக், டெபிட் கார்டு போன்றவற்றுக்கான செலவுகளுக்குக்காக்கவே இந்தக் கட்டணங்கள் பிடிக்கப்படுகின்றன எனப் பேங்க் பஜார் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அத்தில் ஷெட்டி கூறுகிறார்.

ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை இருந்தால் மூட வேண்டும்?

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை மூட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிப்பு புரிந்த பிறகு வேறு நிறுவனத்திற்கு மாறும் போது சம்பள கணக்கு வைத்து இருக்கும் வங்கி கணக்கும் மாறுகின்றது. அப்படி மாறும்பட்சத்தில் குறிப்பிட்ட சில காலம் வரை வங்கி கணக்கில் சம்பளம் வரவில்லை என்றால் அந்தக் கணக்குகள் சதாரணச் சேமிப்பு கணக்காக மாறிவிடும். இதனால் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை வைத்து இருந்தால் 3.5 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் தான். ஆனால் இதுவே பிபிஎப், பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டு போன்ற பிற சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் வைத்து இருந்தால் அதிக லாபம் கிடைக்கும்.

வங்கி கணக்கை மூடுவதற்கான படிகள்?

வங்கி கணககி மூடுவதற்கு ஒவ்வொரு வங்கிகள் ஒவ்வொரு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

1. வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தினை எடுக்க வேண்டும்.
2. அருகில் உள்ள உங்களது வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு கணக்கை மூடுவதற்கான படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கில் பணம் இருந்தால் அதனை உங்களது பிற வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
3. இதுவே உங்களது சேமிப்பு கணக்குச் செயல்படாமல் உள்ளது என்றால் அதனைச் செயல்பட வைக்க வேண்டும். பின்னர் வங்கி கணக்கை மூடுவதற்கான விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.
4. வங்கிகள் உங்களது கணக்கின் பயன்படுத்தாத செக் புக், டெபிட் கார்டு போன்றவற்றைத் திருப்பி அளிக்கக் கோரும். இதுவே சில வங்கிகள் அவற்றை உங்களையே அழிக்கக் கூறும்.

 

ஆர்பிஐ விதிகள்

எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எந்த வழிகாட்டுதல்களையும் ஆர்பிஐ கூறவில்லை. ஆனால் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் அந்தச் சேவைக்கான நியாயமான கட்டணத்தினை வசூலிக்க வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது. மேலும் குறைந்த அளவில் சேவையினைப் பயன்படுத்தி வரும் வங்கி கணக்குகளிடம் இருந்து எந்தக் கட்டணத்தினையும் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Your bank may Rs 500 plus GST charge you for closing a bank account

Your bank may Rs 500 plus GST charge you for closing a bank account
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns